Subscribe Us

யோஷிதவின் எதிர்காலம் அடுத்த வாரம்


கடற்படையில் யோஷித ராஜபக்சவின் செயற்பாடுகள் தொடர்பில் அடுத்த வாரம் அறிவிப்பு வெளியிடப்படும் என பாதுகாப்புதரப்பு தெரிவித்துள்ளது.
யோஷித விவகாரம் தொடர்பில் இன்னும் பல விடயங்கள் ஆராயப்படவேண்டியுள்ளது எனவும் அவர்கள் மேலும் குறிப்பிட்டனர்.
யோஷித ராஜபக்ச கடற்படைக்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட்டமை, வெளிநாட்டு பயிற்சிகளுக்கு அனுப்பட்ட முறைமை தொடர்பில் பல கேள்விகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
யோஷித்த ராஜபக்ச தொடர்பில் விசாரணைகளை் முன்னெடுக்கப்படும் என பாதுகாப்பு இராஜங்க அமைச்சர் ருவன் விஜேயவர்த்தனவும் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் கடற்படைத் தளபதியால் நியமிக்கப்பட்ட சிறப்புக்குழு விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.
இந்தவிடயம் தொடர்பில் இராணுவ ஊடகப்பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர குறிப்பிட்டதுபோல அடுத்த வாரம் விளக்கமளிக்கவுள்ளதாக கடற்படை பேச்சாளர் கப்டன் அக்ரம் அலவி தெரிவித்தார்.

Post a Comment

0 Comments