Subscribe Us

ஜனாதிபதியை கேவலமாக அச்சுறுத்தியவர் கைது!


சமூக வலைத்தளத்தின் ஊடாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அச்சுறுத்தியதாக கூறப்படும் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர் மலேசியாவில் இருந்து நேற்று இலங்கை வந்த போது இவ்வாறு கைது செய்யப்பட்டதாக காவற்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

சந்தேக நபர் யக்கலை பிரதேசத்தை சேர்ந்தவராவர்.

மலேசியாவில் இருந்து நாடுகடத்தப்பட்ட நிலையில் அவர் இலங்கை வந்துள்ளார்.

சந்தேக நபர் இன்று கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

Post a Comment

0 Comments