இலங்கையர் ஒருவருக்கு பாகிஸ்தானின் உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது. சிட்டாரா ஐ இம்டியாஸ் என்னும் உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் ஜனாதிபதி மஹ்மூன் ஹூசெய்னினால் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. மூத்த ஒலிபரப்பாளர், ஊடக ஆலோசகர், காஸ்மீர் கல்வி நிறுவனத்தின் தலைவர் மொஹமட் ஜமாலுதீனுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் தேசிய தினமன்று இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் சிவிலியன் ஒருவருக்கு வழங்கப்படும் மூன்றாவது அதி முக்கியத்துவம் வாய்ந்த விருது சிட்டாரா ஐ இம்டியாஸ் விருது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜமாலூதீன் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவராக கடமையாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜமாலுதீன், காஸ்மீர் விவகாரம் குறித்து மக்களை தெளிவுபடுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய நாடுகள் அமைப்பில் அனாதையான காஸ்மீர் என்ற நூல் ஒன்றையும் வெளியிட்டுள்ளார். காஸ்மீர் பிரச்சினை தொடர்பில் ஜமாலுதீன் பல்வேறு ஆக்கங்களை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


0 Comments