Subscribe Us

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் மீண்டும் கோளாறு!


நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தில், (திங்கட்கிழமை) இரவு முதல், மீண்டும் கோளாறு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனல் மின் நிலையத்தின் மூன்றாவது பிரிவின், வெப்பத்தை சேமிக்கும் குழாயில் ஏற்பட்ட திடீர் கசிவே இதற்குக் காரணமென தெரிவிக்கப்படுகிறது.
நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தின் முதலாவது பிரிவின் மின் உற்பத்தி இயந்திரம் திருத்தப் பணிகள் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று ஏற்பட்ட கோளாறு காரணமாக அதனை மீண்டும் இயங்க வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறித்த மின் கசிவை சீர்செய்வதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அனல் மின் நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எனினும், குறித்த கோளாறு காரணமாக மின்சார விநியோகத்தில் எவ்வித தடங்களும் ஏற்படாதென மின்சக்தி எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments