ஓர் சட்டத்தரணி தனது முப்பத்ததைந்து வயதில் சட்டக்கல்லூரியில் சட்டப் படிப்பினை பூர்த்தி செய்தார் . அரசியலில் ஆரம்ப காலத்தில் இறங்குவதற்கான எண்ணம் அவரிடம் இருக்கவில்லை.
ஒரு வழக்கரறிஞ்சாரக மக்களின் உரிமைகளுக்காக போராடியுள்ளார். பல நண்பர்களின் வேண்டுகோள்களின் அடிப்படையில் மனைவிடம் கலந்தாலோசித்து இல்லினா மேல் சபைக்கு போட்டியிட தயராகினார். தேர்தல் பிரசாரங்களின் போது மக்கள் பின்வரும் இரு கேள்விகளை அவரிடம் தொடுத்தனர்.
01. '' பராக் ஹுசேன் ஒபாமா ! வேடிக்கையான இந்தப்பெயர் உங்களுக்கு எப்படி வந்தது ?
02. " உங்களைப்பார்த்தால் நல்ல மனிதர் மாதிரி தெரிகிறது . ஏன் இப்படி அசிங்கமான , அழுக்கான அரசியலுக்குப் போக வேண்டும்?
இந்தக் கேள்விகள் அவரிடத்தில் ஒரு பழக்கமானவையாக அமைந்தது. பேசுபவர்களிடம் குழந்த்தைத்தனமாக புன்னகைத்து , தலையசைத்து , விமர்சனங்களை செவி சாய்த்து அவர்கள் மத்தியில் இவ்வாறு பதில் உரைப்பார்.
இந்த நாடு உருவாக்கப்பட்ட காலத்திலிருந்து , சமூக உரிமைகளுக்கான இயக்கம் தோன்றிய கீர்த்தி மிகு காலகட்டம் வரை நீடித்த ஒரு பாரம்பரியம் இருக்கிறது.
நம் ஒவ்வொருவருக்கும் அடுத்தவர் மீது உரிமையும் அக்கறையும் இருக்க வேண்டும். நம்மை பிரிக்கிற ஒன்றைவிட நம்மை இணைக்கின்ற ஒன்றே பெரியது.
இந்தக்கொள்கையின் மீது போதுமான அளவு மக்கள் நம்பிக்கை வைத்துச் செயல்பட்டால், நம்மால் பல எல்லாப் பிரச்சினைகளையும் தீர்க்க முடியாவிட்டாலும், அர்த்தமுள்ள எதையாவது நிச்சயம் செய்ய முடியும்.
இந்த எளிய கருத்தை அடிப்படியாகக் கொண்ட பாரம்பரியம் அது என்று சொல்வார் . இது ஒரு நம்பிக்கையான பேச்சு என்று கருதி கூறுவார்.
இவரது இள வயது வீ ராப்புப் பேச்சும் , அவரது ஆர்வத்தையும் போதுமான மக்கள் பாராட்டினர். அத்துடன் இல்லினா மேல் சபைக்கு மக்கள் ஆதரவுடன் தெரிவு செய்யப்பட்டார்.
சிகாகோ சட்டப் பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து பேராசிரியராக பணியாற்றினார்.பல்வேறு இன்னல்களுக்கும் , சவால்களுக்கும் மத்தியில் அவரது அரசியல் சமூகபணிகள் தொடர்ந்தது. காலங்கள் பல ஓடின .
2000 ஆம் ஆண்டு டெமோக்ரடிக் கட்சியாளரை எதிர்த்து போட்டியிட்டு எதிர்ப்பாராமல் படு தோல்வியடைந்தார். மனஉளைச்சலுக்கு உட்ப்பட்டார்.
ஒன்றரை வருடம் கழிந்த பின் ஒரு ஊடகவியலாளர் நண்பருடன் சிற்றுண்டிக்கடையில் தேநீர் அருந்திக்கொண்டிருந்தார்.
நண்பர் அவரிடம் கூறினார் மத்திய செனட்டிற்கு போட்டியிடு என்றும் அரசியலில் நிறைய மாற்றங்கள் வந்துவிட்டன என்பதை உணர்கின்றீர்களா என்று அவரிடம் வினவினார். அவ்விருவரும் அன்றைய நாளில் பத்திரிகையை அவதானித்தவர்களாக படத்தில் ????
தொடரும்...
முஜாஹித் நிஸார்
மாணவன்
இலங்கை சமூகப்பணிக்கல்லூரி


0 Comments