Subscribe Us

header ads

அரசியல் தலைவர்களை மிதமிஞ்சி புகழ்ந்து " எனது உயிரிலும் மேலான தலைவர்" என்று அழைப்பதோ கோஷமிடுவதோ , எழுதுவதோ இஸ்லாமிய கண்ணோட்டத்தில் கூடுமா ?


இது முற்றிலும் ஹராமான மார்க்கம் தடைசெய்த வார்த்தை என்பதில் எவருக்கும் எள்ளளவேனும் சந்தேகமிருக்காது . இருப்பினும் தற்காலத்தில் ஒரு சிலர் தமது அரசியல் தலைவர்களை மிதமிஞ்சி புகழ்ந்து இஸ்லாத்தை விட்டும் வெளியேறும் பரிதாப நிலையைக் கண்டுகொண்டிருக்கின்றோம் .மற்றும் சிலர் இறைவனின் அளவுக்கு தமது அரசியல் தலைவர்களை உயர்த்தி பேசுவதோடு நம்பிக்கையும் கொள்கின்றனர் .
அரசியல் தேவை தான் ஆனால் இஸ்லாத்தை தூக்கி வீசும் அளவுக்கு இவ்வரசியல் கொண்டு செல்லாமல் இருப்பது சாலச் சிறந்தது . 



" ஒரு முறை நபிகளாரிடம் உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் நபியே ! நீங்கள் எனது குடும்பம் , சொத்து செல்வம் , பிள்ளைகள் அனைவரையும் விட மேலானவர் எனக் கூறிய போது , நபியவர்கள் உமரே ! இன்னும் உங்களது ஈமான் பூர்த்தியாகவில்லை என பதிலளித்தார்கள் , அப்பொழுது உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் : நபியே ! நீங்கள் எனது உயிரிலும் விட மேலானவர் என்று சொன்ன போது , நபியவர்கள் : இப்பொழுது தான் உமரே ! ( உமது ஈமான் பூர்த்தியாகியுள்ளது) ". என்று கூறினார்கள் .
ஆக இச்சட்டம் மற்றும் வார்த்தை , நபியவர்களுக்கு மாத்திரம் உரித்தானது . அவர்களே அனைவரின் உயிரை விடவும் மேலானவர்கள் . இவ்வார்த்தை உலகிலுள்ள வேறு எந்தத் தலைவர்களுக்கும் பயன்படுத்த முடியாது . இதுவே மார்க்க சட்டமும் எமது இஸ்லாமிய அடிப்படைக் கோட்பாடுமாகும் . மேலும் நபியவர்களின் தெளிவான ஹதீஸ் , அவர்கள் பின்வருமாறு கூறியிருப்பதையும் கவனத்தில் கொள்வது மிகப் பொருத்தம் எனக் கருதுகிறேன் " உங்களது தந்தை , பிள்ளைகள் முழு உலக மக்கள் அனைவரையும் விட நான் உங்களுக்கு மிகவும் விருப்பமுள்ளவனாக ஆகும் வரை உங்களில் ஒருவர் ஈமான் கொண்டவராக ஆக முடியாது . (ஹதீஸ் )
ஒரு முறை அமைச்சர் ரிஷாதின் ஆதரவாளர் ஒருவர் முகநூலில் " எனது உயிரிலும் மேலான தலைவன் றிஷாத் பதீயுத்தீன் " என்றொரு முகநூல் பக்கமொன்றை திறந்து இருப்பதைக் காணக் கிடைத்தது . அவர் முழுக்க முழுக்க அமைச்சர் றிஷாத் பதியுத்தீனை உயர்த்திப் பேசியிருந்தார் . அவர் உயர்த்திப் பேசியது ஒன்றும் குற்றமில்லை . இங்கு அவதானிக்க வேண்டிய விடயம் யாதெனில் அவர் நபியை விடவும் அமைச்சரை உயர்த்திப் பேசியிருப்பது தான் . உண்மையில் நானும் அதே அமைச்சரின் ஆதரவாளன் தான் , ஏன் இதைக் கூறுகிறேன் எனில் சிலர் இது அமைச்சரின் மீதுள்ள காழ்ப்புணர்ச்சியில் எழுதப்பட்டுள்ளது என்று கூறுவார்கள் . ஆக அரசியல் ஆதரவாளர்களே அரசியலிலும் இஸ்லாத்தின் வரையறைகளை கடைப்பிடிப்பதே மிகவும் உத்தமம் ஏனெனில் குளிக்க சென்று சேற்றை பூசிய கதை வந்து விடக்கூடாதல்லவா .
எமது மார்க்கம் சிலை வணக்கத்திற்கு மாற்றமான மார்க்கம் என்பதை ஒவ்வொருவரும் உள்ளத்தில் ஆழப்பதிய கடமைப்பட்டிருக்கின்றோம் . இன்று வீடுகள் தோறும் அமைச்சர்கள் , அரசியல் தலைவர்களது பெரும் பெரும் புகைப்படங்கள் தொங்கவிடப் பட்டிருக்கின்றன . உருவப் படங்கள் உள்ள வீட்டினுள் மலக்குமார்கள் ( வானவர்கள் ) நுழையமாட்டார்கள் என்ற நபியின் அழகிய பொன்மொழியை மறந்துவிட்டோமா ? அல்லது தெரிந்தும் கண்டும் காணாதது போல் நடக்கின்றோமா ? யாரை ஏமாற்றுகின்றோம் ? எம்மை நாமே ஏமாற்றிக் கொண்டிருக்கிறோம் என்பதே நிதர்சன உண்மை . எமக்கு இறைவனின் ரஹ்மத் முக்கியமா அல்லது அரசியல் தலைகளின் பொருத்தம் முக்கியமா ? நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள் .
அ(z)ஸ்ஹான் ஹனீபா
எனவே எமக்கு உண்மையில் உயிரிலும் மேலானவர் கண்மணி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மாத்திரமே . ஆகையால் அரசியலாக இருப்பினும் இஸ்லாத்தின் வரையறைகளை பின்பற்றி வரம்பு மீறாது செயற்பட எத்தனிப்போம் .
நட்புடன்

Post a Comment

0 Comments