Subscribe Us

இலங்கை கிரிக்கட் அணியின் வேக பந்து வீச்சாளர் லசித் மாலிங்க மீண்டும் இலங்கைக்கு அழைக்கப்பட்டுள்ளார்...


இலங்கை கிரிக்கட் அணியின் வேக பந்து வீச்சாளர் ,லசித் மாலிங்க எதிர் வரும் புதன் கிழமை இலங்கை கிரிக்கட் நிறுவனத்தின் விஷேட மருத்து  குழுவின் முன் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

கிரிக்கட் நிறுவனத்தின் செயலாளர் மொஹான் சில்வா இதனை தெரிவித்துள்ளார்.

இருபதுக்கு இருபது உலக கிண்ண போட்டியின் போது லசித் மாலிங்க தெரிவித்த சில கருத்துகள் தொடர்பாகவும் விசாரிக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

எனினும் லசித் மாலிங்க ஐ.பி.எல் தொடரில் தமது அணியான முப்பை இன்டியன்ஸ் அணியுடன் விளையாட கடந்த வெள்ளிக் கிழமை இந்தியா சென்றுள்ளார்.

Post a Comment

0 Comments