Subscribe Us

மஸ்ஜித் அல்-அக்ஸாவில் யூதர்கள் கும்பலாக நுழைவது ஒரு திட்டம் -ஷேய்க் ராயீத் சலாஹ் அதிரடி !



அல் ரிஸாலா செய்திஇதழில் வெளியான தகவல் படி ,பாலஸ்தீன இறைஇல்லம் அல்-அக்ஸாவில் யூதர்கள் கள்ளத்தனமாக நுழைவது ஒரு திட்டமிட்ட செயல் மாறாக தனிப்பட்ட முறையில் யாரும் வருவது இல்லை என இஸ்ரேலிய இஸ்லாமிய அமைப்பின் தலைவர் ஷேய்க் ராயீத் சலாஹ் காணொளி ஒன்றில் நேர்காணல் அளித்துள்ளார்.

அல்-அக்ஸாவில் யூதர்கள் நுழைய வேண்டும் என்பது இஸ்ரேலிய அரசின் கொள்கை ஆகும் . அதற்காக கும்பலாக செல்லும் யூதர்களுக்கு பாதுகாப்பு மற்றும் பண உதவி அளிக்கப்பட்டு வருகிறது. இறை இல்லத்தில் நுழைவதற்கு தனிப்பட்ட முறையில் யாரும் அணுகுவதில்லை.

யூதர்கள் தற்பொழுது கள்ளத்தனமாக நுழைவதைக் காரணமாகக் கொண்டு யூதர்களுக்கு என ஒரு வழியை ஏற்படுத்தி, மஸ்ஜித் அல்-அக்ஸாவை முஸ்லிம்களிடமிருந்து பிரிப்பதே அவர்களின் கொள்கை ஆகும்.

அதற்காகவே யூத அமைப்புகளுக்கு நிதியுதவி அளிப்பது, மஸ்ஜித் அல்-அக்ஸாவில் பாலஸ்தினர்களிடம் வம்புக்கு இழுப்பது, பாலஸ்தினர்களை பள்ளியை விட்டு நிரந்தர தடை விதித்து காலபோக்கில் யாருக்கும் உள்ளே நுழைய அனுமதி இல்லை என்ற தோற்றம் உருவாக்கப்பட்டு வருகிறது.

மேலும் பாலஸ்தின மக்களை ஜெருசலம் நகரத்தை விட்டு விரட்டும் வகையில் வீர மரணம் அடைந்த குடும்பத்தை சேர்ந்தவர்கள் மீது பல்வேறு குற்றசாட்டுகளை வைத்து, அவர்களின் வீடுகளை இடித்து நாடு கடத்துகின்றனர், காலபோக்கில் ஜெருசலம் நகரை பாலஸ்தினர்கள் இல்லாதா நகரமாக்குவதே இஸ்ரேலின் கொள்கை என ஷேக் ராஈத் சலாஹ் நேர்காணல் அளித்தார் .

- அபூஷேக் முஹம்மத்

Post a Comment

0 Comments