இங்குள்ள மிர்சாபூர் மாவட்டத்தில் உள்ள ரெயில் நிலைய சந்திப்பு வழியாக சென்ற ரெயிலின் முன்னால் நின்று வினோத்(18), ஜிதேந்திரா(20) ஆகியோர் தங்களது கைபேசி மூலம் ‘செல்பி’ எடுக்க முயன்றனர். இதைக்கண்ட அப்பகுதி ரெயில்வே கேட்மேன் அவர்களை விரட்டியடிக்க முயன்றார்.
அவர்கள் ரெயில் தண்டவாளத்தை கடப்பதற்கு முன்னர், அவ்வழியாக வேகமாக வந்த பிரம்மபுத்திரா மெயில் இருவர்மீதும் மோதியது. தண்டவாளத்தின் ஓரம் விழுந்து கிடந்த வினோத் மற்றும் ஜிதேந்திராவின் பிணங்களை அதே பிரம்மபுத்திரா ரெயிலில் வந்த ஒருவர் மிக நெருக்கமாக பார்ப்பதற்காக ஓடும் ரெயிலில் இருந்து வெளியே எட்டிப் பார்த்தார்.
விதிவசமாக, அவரும் ரெயிலில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தார். மூன்று பிரேதங்களையும் கைப்பற்றி, மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பிவைத்த ரெயில்வே போலீசார், இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


0 Comments