நீருக்குள் பிரசவம் நிகழ்வது தாய்க்கும் சேய்க்கும் நலம் என்பதை இன்றைய அறிவியல் உலகம் கண்டுபிடித்துள்ளது.
திருக்குர்ஆனோ இன்றைய விஞ்ஞானிகள் சொல்கின்ற அதே கருத்தை 1400 வருடங்களுக்கு முன்பே கூறியுள்ளது.
19:23 ( பிரசவ வலி அவரை ஒரு பேரீச்சை மரத்தின் அடிப்பாகத்திற்கு கொண்டு சென்றது. " நான் இதற்கு முன்பே இறந்து அடியோடு மறக்கடிக்கப்பட்டவளாக இருந்திருக்கக் கூடாதா ?" என்று அவர் கூறினார். )
19:24 ("கவலைப்படாதீர் உமது இறைவன் உமக்கு கீழே ஊற்றை ஏற்படுத்தியுள்ளான்." என்று அவரது கீழ்ப்புறத்தில் இருந்து வானவர் அழைத்தார்.)
இவ் வசனங்களில் நீருக்குள் நடக்கும் பிரசவத்தால் வலி இருக்காது என்று கருத்து கூறப்படுகிறது. இன்றைய நவீன உலகம் இப்போது இதைக் கண்டுபிடித்துள்ளது.
ரஷ்யாவில் பிரசவத்தை நீருக்குள் வைத்துக் கொள்ளும் முறை நடைமுறையில் உள்ளது. நீருக்குள் பிரசவம் நடைபெறுவது பிரசவத்தை தாய்க்கு எளிதாக்குகிறது என்பது ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கருப்பையில் நீருக்குள் மிதந்தபடிதான் குழந்தை உள்ளது. எனவே நீருக்குள் பிரசவம் நடைபெறும் போது குழந்தை தனக்கு பழக்கப்பட்ட நிலையிலேயே வெளியே வருகிறது. எனவே குழந்தைக்கும் இது இயல்பானதாக உள்ளது. குளிர்நீரில் பிறப்பதால் குழந்தைக்கு நோய் எதிர்ப்புத்திறன் கூடுகிறது.
ரஷ்யாவில் பிரசவ மருத்துவமனைகளில் பிரசவத்துக்கென சிறப்பு நீச்சல் குளங்கள் நீருடன் தயார் நிலையில் உள்ளன.


0 Comments