Subscribe Us

header ads

மகிந்த ராஜபக்ச போன்ற தலைவரை உலகில் எங்கும் தேட முடியாது! - ஜனாதிபதி


தேர்தலில் தோற்று வீட்டுக்கு செல்ல ஹெலிகப்டர், பாதுகாப்புக்கு தான் விரும்பிய எண்ணிக்கையில் இராணுவத்தினர் மற்றும் குண்டு துளைக்காத வாகனத்தை எடுத்துச் சென்ற தலைவரை வேறு எந்த நாட்டிலும் தேடிக் கண்டுபிடிக்க முடியாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
மொனராகலை மாவட்டம் பிபிலை தொகுதியின் மாநாட்டில் இன்று கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளதாக கூறி, எதிர்க்கட்சியை சேர்ந்த சிலர் நாடாளுமன்றத்தில் கோஷமிட்டு வருகின்றனர்.
கடந்த காலங்களில் மகிந்த ராஜபக்ச மற்றும் சரத் பொன்சேகா ஆகியோர் மின்சார நாற்காலி பற்றி கூறிக்கொண்டு நாடு முழுவதும் சென்றனர்.
நான் பதவிக்கு வந்த பின்னர், மின்சார நாற்காலி மற்றும் சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லும் சந்தர்ப்பத்தை தடுத்து நிறுத்தினேன்.
தற்போது அவர்கள் நாடாளுமன்றத்தில் சொகுசு ஆசனங்களில் அமர்ந்துள்ளனர் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments