ரூஸி சனூன் புத்தளம்
புத்தளம் கல்பிட்டி பிரதேசத்தில் செவ்வாய்க்கிழமை (19) மாலை வீசிய கடுமையான சூறாவளி காற்றின் காரணமாக கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கல்பிட்டி பொலிசார் தெரிவித்தனர்.
கல்பிட்டி பள்ளிவாசல்துறை வெல்லங்கரை பிரதேசத்தை சேர்ந்த அப்துல் அஸீஸ் முஹம்மது அமீன் எனும் மூன்று பிள்ளைகளின் தந்தையான 41 வயது இளம் குடும்பஸ்தரே இவ்வாறு மரணத்தை தழுவியவர் ஆவார்.
பள்ளிவாசல்துறை களப்பு முனையில் ஓரளவு ஆழத்தில் மீன் பிடித்துக்கொண்டிருந்த வேளை கடுமையாக வீசிய சூறாவளி காற்றினால் இவரின் மீன் பிடி வள்ளம் கவிழ்ந்ததால் இவர் காணாமல் போயுள்ளார்.
அன்று இரவு முழுவதும் கடலில் தேடியும் இவரை கண்டு பிடிக்க முடியாததால் புதன்கிழமை காலை கல்பிட்டி கடற்படையின் உதவியுடன் தேடியதில் இவர் சடலமாக மீட்கப்பட்டார்.
புத்தளம் மற்றும் கல்பிட்டி திடீர் மரண விசாரணை அதிகாரி பீ.எம். ஹிஸாம் மரண விசாரணைகளை மேற்கொண்டு கடலில் மூழ்கியதால் ஏற்பட்ட திடீர் மரணம் என தீர்ப்பு வழங்கி சடலத்தை குடும்பத்தினரிடம் ஒப்படைத்தார்.
0 Comments