ஹிம்மஸ் அணைந்தது
அலப்போ எரிகிறது
ஷாம் தேசம் வென்றவரே!
கலீபா உமரே!
வாருங்கள் முஆதே
காலித் பின் வலீதே
இப்னுல் ஜர்ராஹே
சிரியா தேசம் பற்றி எரிகிறது!
இப்னு ஸபா
மூட்டிவைத்த அடுப்பு
தீ கங்கம்
கக்குகிறது அங்கு!
அபூஜஹ்ல் புட்டினும்
இப்னு ஸபா பஷாரும்
அஹ்ஸாப் போர்
நடத்துகிறார்கள் அங்கு!
ரஷ்யாவில் பள்ளி திறப்பு
சிரியாவில் பள்ளி அழிப்பு
புதிய பள்ளி வேணாம்
இருக்கும் பள்ளி காக்க
வாருங்கள் ஸஹாபாக்களே!
அமெரிக்காவில் ஐரோப்பாவில்
ஆசியாவில் ஆபிரிக்காவில்
இங்கிலாந்தில் ரஷ்யாவில்
பாங்கொலி மகிழ்ச்சி
ஷாமிலோ சங்கொலி
கலீபா உமரே
நீங்கள் உருவாக்கிய
ஷாம் தேசம்
அழிகிறது இங்கே
கேட்பாரும் இல்லை
பார்ப்பாரும் இல்லை
ஜும்ஆ இல்லை
பெருநாள் இல்லை
ஏன் இன்று
ஷாமே இல்லை
ரத்தமின்றி சத்தமின்றி
கொலையின்றி கொள்ளையின்றி
கொடூரமின்றி ஆக்கிரமிப்பின்றி
ஷாமில்
அமைதியாய் நுழைந்தவரே
கலீபா உமரே
பாதிரி கேட்டும்
வெளியே தொழுதவரே
அபூஜஹ்ல் கள்
உத்பா க்கள்
ஷைபா க்கள்
இப்னு உபை க்கள்
இப்னு ஸபா க்கள்
பாரிய வாள் கொண்டு
வானில் திரிகிறார்கள்
ரத்த ஆற்றில்
அலப்போ வாசிகள்
மூழ்கித் தவிக்கிறார்கள்
ஷாம் அழுகிறது
உதிரம் கொட்டுகிறது
உமரை காலிதை
முஆதை உபாதாவை
கூவி அழைக்கிறது.
0 Comments