Subscribe Us

பிரபல கடத்தல் மன்னனை தாய்லாந்தில் தரிசித்தார் - மஹிந்த


தாய்லாந்துக்கு சுற்றுப் பயணத்தினை முடித்து கொண்டு ஜீ.எல்.பீரிஸ் உடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாடு திரும்பியுள்ளார்.
நேற்று இரவு 11.40 மணியளவில் அவர் யுஎல் 889 விமானம் மூலம் நாட்டை வந்தடைந்தார் என எமது கட்டுநாயக்க விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.
முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் உடன் இணைந்து மஹிந்த ராஜபக்ஷ தாய்லாந்திற்கு விஜயம் செய்திருந்தார்.
தாய்லாந்தில் மத வழிபாட்டு நிகழ்வுகளில் பங்கேற்றதுடன் அங்கு வாழ்ந்து வரும் இலங்கையர்களையும் உக்ரேய்ன் தீவிரவாதிகளுக்கு ஆயுதம் விற்பனை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்ட உதயங்கவையும் சந்தித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments