ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸுக்கு ஒரு வணிகப்பங்காளியை (Business Partner) தேடிக்கொள்வதற்கான பிரதமரின் ஆலோசனையினை இன்று அமைச்சரவை அங்கீகரித்துள்ளது!
உண்மையில் இது இரண்டாவது திருமணத்திற்கான பச்சைக்கொடி என்றும் சொல்லலாம்!
முன்னர் இதற்கான முதலாவது திருமணம் Emirates நிறுவனத்துடன் கோலாகலமாக நிகழ்ந்து மிகவும் மகிழ்ச்சியாக Srilankan Airlines காலந்தள்ளியது!
புதுப்புது நாடுகளுக்கெல்லாம் பயணமாகியது, தேனிலவின் போது புதிய விமானங்களை கொள்வனவு செய்து மகிழ்ந்தது!
அறபு மாப்பிள்ளை கொஞ்சமும் குறை வைக்கவில்லை.
நம் நாட்டு மக்களின் கண்களே பட்டுவிடுமளவுக்க ஶ்ரீலங்கன்
ஆஹா ஓஹோவென்று வாழ்ந்து கொண்டிருந்தது!
அப்போதுதான் அப்பச்சி வடிவில் வந்தது சனி!
அவரும் பட்டாளங்களும் ஐரோப்பிய நாடொன்றிலிருந்து திரும்பும் போது “நாங்கள் பெண் வீட்டார்” என்ற தோரணையில் , கடைசி நேரமென்றாலும் first class ஆசனங்கள் வேண்டும் என்று emirates தரப்பிடம் அடம்பிடித்த விவகாரம் ஈற்றில் Srilankan & Emirates திருமண பந்தம் விவாகரத்தில் முடிந்து போக காரணமாயிற்று!
கடைசியில் விதவையாகிய ஶ்ரீலங்கன் கடன்பட்டு , நஷ்டப்பட்டு காலத்தை தள்ளியது….
விமானசேவைகளின் தலைவராக அப்போது பணியாற்றிய மஹிந்தவின் மைத்துனர் அதனை ஒரு விபச்சாரியாகவே பாவித்தார்!
இவ்வாறு நொந்து நூலாகிப்போன ஶ்ரீலங்கனை மீட்டெடுத்து அதன் கடன்களை சுமந்து எப்படியோ இரண்டாவது திருமணமொன்றை செய்து வைக்க வேண்டுமென நல்லாட்சி என்ற அதன் புதிய பாதுகாவலர்கள் முடிவுசெய்திருக்கிறார்கள்.
சீரோடும் சிறப்போடும் அரபு ராஜாவுக்கு வாழ்க்கைப்பட்டிருந்த ஶ்ரீலங்கனை இரண்டாவது தடவையாக துணையாக ஏற்றுக்கொள்ள போவது யார்?
பழைய மாப்பிள்ளையே குற்றங்களை மறந்து கரம் பிடிப்பாரா?
அல்லது;
அபலைக்கு வாழ்வளிப்போமென ஒரு வெள்ளைக்கார முதலாளி முன்வருவாரா?
மாறாக;
ஶ்ரீலங்கன் மீது நீண்ட காலம் கண்வைத்திருக்கும் வேறொரு அரபு ஷேய்க் முடித்துக்கொள்வாரா?
இல்லாவிட்டால்;
இந்த இடைவெளியில், பாதிக்கப்பட்ட பெண்ணை பயன்படுத்தி ஏதாவது சொந்த நிகழ்ச்சி நிரலை நகர்த்திவிடலாம் என இந்திய மாப்பிள்ளை ஒருவர் வந்துவிடுவாரா?
வேறு வழியேயில்லாமல் ஒரு China காரனுக்கே தலையில் கட்டவேண்டிவருமோ?
போன்ற மில்லியன் டொலர் கேள்விகளை இந்த இரண்டாந்திருமணம் எழுப்பிவிட்டிருக்கிறது.
-முஜீப் இப்ராஹீம்-


0 Comments