(சாய்ந்தமருது - எம்.எஸ்.எம்.சாஹிர்)
சாய்ந்தமருது ஜாமிஉல் இஸ்லாஹ் ஜும்ஆப் பள்ளிவாசல் தஃவா குழு ஏற்பாடு செய்துள்ள பெண்களுக்கான எழுச்சி மாநாடு எதிர்வரும் 23.04.2016 ஆம் திகதி சாய்ந்தமருது ஜாமிஉல் இஸ்லாஹ் ஜும்ஆப் பள்ளிவாசலில் இடம் பெறவுள்ளது.
அஸர் தொழுகை முதல் மஃரிப் தொழுகை வரை இடம் பெறவுள்ள பெண்கள் எழுச்சி மாநாட்டில், “பெண்களை சீரமைப்பதில் இஸ்லாமியக் கலாசாரத்தின் பங்கு” எனும் தலைப்பில் பிரபல மார்க்க சொற்பொழிவாளர்கள், உலமாக்கள் கலந்து கொண்டு பயான் செய்யவுள்ளனர். அத்தோடு, நிகழ்த்தப்படும் பயான்களிருந்து காத்திரமான அறிவு சார் கேள்விகளும் தொடுக்கப்பட்டு, பதில் சொல்வர்களுக்கு பெறுமதியான பரிசில்களும் அன்றைய நிகழ்வில் வழங்கப்படவிருப்பதாக பள்ளிவாசலின் தலைவர் எஸ்.எம்.இனாமுல்லாஹ் நவமணிக்குத் தெரிவித்தார்.
இந் நிகழ்வில் அனைவரும் கலந்து பயன்பெறுமாறு ஏற்பாட்டுக் குழுவினர் அழைப்புவிடுக்கின்றனர்.


0 Comments