மாத்தளை - லக்கல பொலிஸ் நிலையத்தில் காணாமல் போன ஆயுதங்கள் கண்டுபிடிப்புக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
குறித்த ஆயுதங்கள் லக்கல - சந்தகல விகாரையில் நீர்த்தேக்கத்திற்கு அருகில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலும் இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.
குறித்த ஆயுதங்களில் ரி-56 ரக துப்பாக்கி ஒன்றும், 5 கைத்துப்பாக்கிகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை லக்கல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த ஆயுதங்கள் கடந்த 14ஆம் திகதி காணாமல் போயிருந்தன.
துப்பாக்கிகள் திருடப்பட்ட சமயத்தில் பணியில் இருந்த பொலிஸார் மூவர் பணி நீக்கம் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


0 Comments