Subscribe Us

header ads

ஹெரோயின் மாத்திரைகளை விழுங்கி இலங்கைக்குள் பிரவேசித்த பாகிஸ்தானியர் கைது


ஹெரோயின் மாத்திரைகளை  விழுங்கி கடத்திய பாகிஸ்தான் பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து  விமானநிலைய மது ஒழிப்பு பொலிஸ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கட்டார் விமானச்சேவைக்கு சொந்தமான QR656 என்ற விமானத்தின் மூலம் இலங்கைக்கு  வந்த 53 வயதுடைய பாகிஸ்தான் பிரஜையொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். 


குறித்த நபர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அவரின் வயிற்றில் இருந்து 22 ஹெரோயின் வில்லைகள் காலை 8 மணிக்குள் மீட்கப்பட்டதாகவும் மீதமுள்ள வில்லைகளை வெளியில் எடுக்கும் பணிகள் இடம்பெற்று வருவதாகவும்  பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments