Subscribe Us

புத்தளம் அல்-ஹனா குர்ஆன் மத்ரஸாவின் 8வது வருட நிறைவு (படங்கள் இணைப்பு)

சுமார் 15 வருடங்களுக்கு முன்னால் பெண்கள் சேவையை மையப்படுத்தி ஆரம்பிக்கப்பட்டதே   அல்ஹனா மாதர் நலன்புரி சங்கம்.

இந் நலன்புரி சங்கத்தினால் காலப்போக்கில் சமூக நலன்களுடன் பற்பல சமூக சேவைகள் ஆரம்பிக்கப்பட்ட நேரத்தில் சுமார் 8 வருடங்களுக்கு முன்னால் புத்தளம் மணல்குன்றில் 250 மாணவ,மாணவிகளை கொண்டு ஆரம்பிக்கப்பட்டதே அல்-ஹனா குர்ஆன்  மத்ரஸா.

இக்குர்ஆன் மத்ரஸா ஆரம்பிக்கப்பட்டு 8 வருடங்களின் பூர்த்தியை நினைவு கூறும் முகமாக மாணவ,மாணவிகளுக்கு நிகழ்ச்சி நிரல்களுடன் சான்றிதழ்கள் வழங்கும் வைபவமும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்வில் பெற்றோர்களும், இங்கே பயிலும் மாணவர்களும் ஆசிரியர்களும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடதக்கது.

-RILA-










Post a Comment

0 Comments