Subscribe Us

header ads

மாவனல்லை ஸாஹிராக் கல்லூரியின் 79ஆவது பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் "கார் வொஷ்'


மாவனல்லை ஸாஹிராக் கல்லூரியின் 79ஆவது பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் மாபெரும் "கார் வொஷ்' நிகழ்வு எதிர்வரும் ஏப்ரல் 9, 10 ஆம் திகதிகளில் கண்டி  கொழும்பு பிரதான வீதியில் நடைபெறவுள்ளது.

ஸாஹிராக் கல்லூரியின் 95 ஆண்டு நிறைவு தினத்தை முன்னிட்டே மேற்படி "கார் வொஷ்' நிகழ்வினை 79 ஆவது பழைய மாணவர் சங்கம் ஏற்பாடு செய்துள்ளது. 

குறித்த கார் வொஷ் நிகழ்வானது எதிர்வரும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கொழும்பு  கண்டி பிரதான வீதியில் மாவனல்லை " திணிஞ்தஞு ச்தtணி ண்ணீச்'வில் நடைபெறவுள்ளது. காலை 9.30 6.30 வரை இரண்டு தினங்களாக நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் அனைவரும் கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டுக் குழு அழைப்புவிடுக்கின்றது. 

இந்நிகழ்வின் மூலம் திரட்டப்படும் பணத்தினை கல்லூரி அபிவிருத்திக்கும், சமூக செயற்பாடுகளுக்கும் பயன்படுத்தப்படவுள்ளதாக 79ஆவது பழைய மாணவர் சங்கத்தின் தலைவர் ரமீஸ் அன்சார் தெரிவித்துள்ளார். 

ஸாஹிராக் கல்லூரியின் 2012 விடுகை மாணவர்களின் ஒன்றியமான 79 பழைய மாணவர் சங்கமானது கடந்த காலங்களில் கல்லூரி  சமூகம் சார்ந்த வேலைத்திட்டங்களில் தன்னை ஈடுபடுத்தி வருகின்றமைக் குறிப்பிடத்தக்கது. 

Post a Comment

0 Comments