குஜராத மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்தவர் ஹிதேஷ் சாவ்டா (வயது 23) இவரும் அமெரிக்காவை சேர்ந்த எமிலி, என்ற 41 வயது பெண் பேஸ்புக்கில் நண்பர்களாக பழகிவந்துள்ளனர். ஹிதேஷ் சாவ்டா-வுக்கு ஆங்கிலம் தெரியாத நிலையில், அவர் கூகுள் மூலம் மொழி பெயர்த்து சாட்டிங்கில் ஈடுபட்டுள்ளார். அதேபோல், ஹிதேஷ் சாவ்டா ஹிந்தியில் அனுப்பும் தகவலை எமிலி, கூகுள் மூலம் மொழி பெயர்த்து பேசி வந்துள்ளார்.
நண்பர்களாக பழகி வந்த இருவரும் நாளடைவில் காதலிக்க தொடங்கியுள்ளனர். பின்னர் வீடியோ கான்பிரஷிங்கின் மூலம் தங்கள் காதலை வளர்த்துள்ளனர். பின்னர், ஹிதேஷை நேரில் சந்திக்க விரும்பிய எமிலி இந்தியாவிற்கு வந்துள்ளார். இதையடுத்து இவர்கள் காதல் விவகாரம் ஹிதேஷ் சாவ்டா வீட்டிற்கு தெரியவந்துள்ளது.
முதலில் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த ஹிதேஷின் பெற்றோர், பின்னர் இருவரின் காதலை புரிந்து கொண்டு திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து பெற்றோர் சம்மதத்துடன் இவர்களது காதல் திருமணம் நடந்துள்ளது.
எமிலி கூறுகையில், ஹிதேஷின் அன்பு உண்மையானது. அவருடைய எளிமையும் வெகுளித்தனமே என்னை மிகவும் கவர்ந்தது என கூறியுள்ளார்.
ஹிதேஷ் எமிலி பற்றி கூறுகையில், எமிலிக்கு இந்திய பாரம்பரியமும், கலாச்சாரமும் மிகவும் பிடித்திருப்பதாக கூறியுள்ளார்.


0 Comments