நாட்டில் திரைமறைவில் நடக்கும் பலவாறான அட்டூழியங்கள் சீசீடிவி கமராக்கள் மூலம் படமாக்கப்பட்டோ, காணொளி வடிவத்திலோ இணையத்தளங்கள் மூலம் வெளி வந்துகொண்டிருக்கின்றது.
அந்தவகையில் பாடசாலை மாணவிகள் மற்றும் சிறுமிகளின் வாழ்க்கையை சீரழிக்கும் செயற்பாடொன்று வெளிவந்திருந்தது.
மாத்தறை திக்வெல்லையில் அமைந்துள்ள திரையரங்கம் ஒன்றில் சட்டவிரோத நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது இரகசிய கெமராவில் பதிவாகியுள்ளது.
குறித்த திரையரங்கில் படம் பார்ப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள இரண்டு பேர் அமரக்கூடிய வகையிலான கூடங்களுக்கு காதல் ஜோடிகள் 350 ரூபா பணம் பெற்றுக்கொண்டு அனுமதிக்கப்படுகின்றனர்.
பொதுவாக படம் பார்ப்பதற்காக வழங்கப்படும் நுழைவு சீட்டுகள் இங்கு வழங்கப்படுவதில்லை.
இதன் போது வயதானவர்கள் பாடசாலை மாணவிகளை அழைத்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இது தொடர்பில் திரையரங்க உரிமையாளர் தெரிவிக்கையில் ,
திரையரங்கத்தில் நடத்தப்படும் மதுபான சாலையின் மதுபானம் உரிமத்தை பாதுகாத்துக்கொள்வதற்காகவே தாம் இவ்வாறு நுழைவுச்சீட்டு வழங்காமல் பணம் பெற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.
திரையரங்கு என்ற பெயரில் காதல் / காமக் கூடங்கள் நடாத்தி வருகின்றனர்.
பெற்றோர்களே உங்களின் பிள்ளைகள் மீதும் சற்று கவனம் செலுத்துங்கள்.
0 Comments