Subscribe Us

header ads

T-20 உலகக்கிண்ணப் போட்டி: இலங்கை அணிக்கு முதல் தோல்வி


இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கிடையில் நேற்று இடம் பெற்ற போட்டியில் ​ மேற்கிந்திய தீவுகள் அணி 7 விக்கட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பெங்களூரு சின்னஸ்வாமி கிரிக்கட் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் ஆடிய இலங்கை அணி 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 122 ஓட்டங்களை எடுத்தது.

இலங்கை அணியின் சார்பில் திஸர பெரேரா அதிகபட்சமாக 40 ஓட்டங்களை எடுத்தார்.

அணியின் தலைவர் ஏஞ்சலோ மேத்யூஸ் 20 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

மேற்கிந்தியத் தீவுகள் அணியின் சார்பில் ஏ டி ரசல் நான்கு ஓவர்களில் 34 ஓட்டங்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

123 என்ற வெற்றி இலக்கை நோக்கி விளையாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 18.2 ஓவர்களில் 3 விக்கட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

மேற்கிந்தியத் தீவுகள் அணியின் சார்பில் துவக்க ஆட்டக்காரர் பிளெட்சர் அதிரடியாக ஆடி 84 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தது நேற்றைய ஆட்டத்தின் சிறப்பம்சமாகும்.

ஆட்டநாயகன் விருது பிளெட்சருக்கு வழங்கப்பட்டது.

Post a Comment

0 Comments