அபு அலா -
சுகாதார அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்னவின் சுகநலம் வேண்டிய சர்வமத வழிபாடு நிகழ்வு நேற்று மாலை (02) கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இடம்பெற்றது.
சுகயீனம் காரணமாக சிங்கப்பூர் மவுன்ட் எலிசபெத் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் சுகாதார அமைச்சர் டாக்டர் ராஜித்த சேனாரத்னவுக்கு சுகநலம் வேண்டிய சர்வமத வழிபாடுகள் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் பணிப்பாளர் டாக்டர் ஏ.எல்.அலாவுதீன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு குறித்த காரியாலயத்தில் கடமையாற்றும் வைத்தியர்கள், உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் பங்கேற்று சுகாதார அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்னவுக்காக சுகநலம் வேண்டிய சர்வமத வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
0 Comments