Subscribe Us

header ads

சவுதியில் பெண் எஜமான் மற்றும் அவரது மகளை கொலை செய்த பணிப் பெண்...!


சவுதியின் ரியாத்தில் வீட்டுப் பணிப்பெண்ணொருவர் தனது பெண் எஜமான் மற்றும் அவரது மகளை கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார். 


மொராக்கோ நாட்டைச் சேர்ந்த பெண்ணொருவரே இவ்வாறு குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார். 


அவர் தனது எஜமானான 65 வயதுப் பெண் மற்றும் 30 வயதான அவரது மகள் ஆகியோரையே கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 


அவர்களது உடலை இறைச்சி வெட்டும் கத்தியால் துண்டு துண்டாக வெட்டியுள்ள சந்தேகநபரான பெண் பின்னர் பொலிஸில் சரணடைந்துள்ளார். 


குறித்த பணிப்பெண்ணிடம் மனநோயாளிக்கான அறிகுறிகள் தென்பட்ட தாகவும், ஏதாவது மோதல் காரணமாக அது அதிகரித்திருக்கக் கூடுமெனவும் உயரதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments