டி20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை அணியின் செயல்பாடு குறித்த தனது ஆதங்கத்தை கொட்டித் தீர்த்துள்ளார் இலங்கை அணியின் முன்னாள் வீரர் மஹேல ஜெயவர்தன.
இந்தியாவில் நடந்து வரும் டி20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் மோசமாக ஆடிய இலங்கை அணி சூப்பர்-10 சுற்றோடு வெளியேறியது.
இந்நிலையில் டுவிட்டரில் இலங்கை அணி குறித்த ரசிகர்களின் கேள்விக்கு அந்த அணியின் முன்னாள் தலைவர் ஜெயவர்த்தனே பதிலளிக்கையில்;
அப்போது ஒரு ரசிகர், “நீங்களும், சங்கக்காரவும் அணியை பற்றி யோசிக்காமல் ஒரே நேரத்தில் ஓய்வு பெற்றுவிட்டீர்கள்” என்று வருத்தப்பட்டார்.
இதற்கு ஜெயவர்த்தனே, “சங்கக்காரவும், நானும் 2 வருடங்களுக்கு முன்பே டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டோம்.
அணியை வலுப்படுத்த போதுமான நேரம் இருந்தும் இலங்கை அணி கோட்டை விட்டுவிட்டது” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஜெயவர்த்தனேவின் ஆதங்க டுவிட்டுகள் வாசகர்களுக்காக;


0 Comments