எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைவதற்காகப் புறப்படவுள்ள இலங்கையர்களான ஜயந்தி கரு உத்தும்பொல மற்றும் ஜொஹான் பீரிஸ் ஆகியோரை வாழ்த்தி வழியனுப்பி வைக்கும் நிகழ்வு விளையாட்டுத்துறை அமைச்சில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர, விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் மற்றும் அமைச்சின் உயர் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
8,488 மீற்றர் உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் அடுத்த மாதம் ஏறுவதற்கு ஜயந்தி கரு உத்தும்பொல மற்றும் ஜொஹான் பீரிஸ் ஆகியோர் திட்டமிட்டுள்ளனர்.


0 Comments