சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் நாளை அல்லது நாளை மறுதினம் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் நாளை அல்லது நாளை மறுதினம் வெளியிடப்படவுள்ளது.
இலங்கை பரீட்சை திணைக்களம் இந்த தகவலை கொழும்பு ஊடகமொன்றுக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் நாளை 20ம் திகதி அல்லது நாளை மறுதினம் 21ம் திகதி வெளியிடப்படவுள்ளது.
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் ஆறு லட்சத்து எழுபதாயிரம் பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
எமது இணைதளத்திலும் பார்வையிடலாம் : http://www.kalpitiyavoice.com/p/blog-page_19.html


0 Comments