மின்தடை ஏற்படுகின்ற நேரங்களில் இலங்கைமின்சார சபையின் மட்டக்களப்பு பிராந்தியத்திலுள்ள அனேகமான பிராந்திய,பிரதேச அலுவலகங்களின் தொலைபேசி இலக்கங்கள் இயங்குவதில்லை என பொது மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக, மின்தடை ஏற்படுகின்ற நேரங்களில் மின்சாரம் எப்போது வரும் என்பதற்காக மின்சார நுகர்வோராகிய நாங்கள் தொலைபேசி ஊடாக தொடர்புகளை ஏற்படுத்துகின்ற பொழுது மின்சார சபையின் மட்டக்களப்பு பிராந்தியத்திலுள்ள பிரதேச அலுவலகங்களின் தொலைபேசிகள் இயங்குவதில்லை எனவும் இது தொடர்பில் மக்களுக்கு சேவை வழங்குவதாகக் கூறும் இலங்கை மின்சார சபையும், மின்சார அமைச்சரும் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் பொது மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.


0 Comments