Subscribe Us

header ads

காதலனின் இதயத்தை வெட்டி எடுத்த காதலி


பங்களாதேஷில் தனது காதலனின் இதயத்தை வெட்டி எடுத்தக் குற்றத்துக்காக பாத்திமா அக்தர் சோனாலி என்ற பெண்ணுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குல்னா என்ற பகுதியைச் சேர்ந்தவர் சோனாலி. இவர் மருத்துவமனை ஒன்றில் பணியாற்றி வந்த ஷிபான்(28) என்ற இளைஞரை காதலித்து வந்துள்ளார்.
இறுதியில் ஷிபான், சோனாலியை திருமணம் செய்து கொள்ள மறுத்துவிட்டார்.
இதற்கிடையே, ஷிபானும் சோனாலியும் நெருக்கமாக இருந்ததை காணொளியாக பதிவு செய்திருந்ததும், மேலும் பல பெண்களுடன் ஷிபானுக்கு தொடர்பிருந்ததும், அவரது மடிகணனி மூலம் சோனாலி தெரிந்து கொண்டார்.
இதனால் ஆத்திரமடைந்த சோனாலி, ஷிபானின் கழுத்தை வெட்டிக் கொன்றதோடு, அவரது இதயத்தை வெட்டி வெளியே எடுத்தார்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வந்த நிலையில், சோனாலிக்கு மரண தண்டனை விதிப்பதாக நீதிமன்றம் நேற்று தீர்ப்பை அளித்துள்ளது.
தான் செய்த குற்றம் குறித்து சோனாலி கூறுகையில், ஷிபானின் இதயம் பெரியதாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன். அதனால் அது எவ்வளவு பெரியதாக இருக்கிறது என்பதை பார்க்கவே அவ்வாறு செய்தேன் என்று வாக்குமூலம் அளித்துள்ளார்.

Post a Comment

0 Comments