Subscribe Us

header ads

மீண்டும் எமது நாடு தோல்வியின் பாதைக்கு செல்லாது - அமைச்சர் தயாசிறி ஜயசேகர

இர்ஷாத் றஹ்மத்துல்லா

இந்தியாவில் நடை பெறவுள்ள T 20 கிரிக்கட் போட்டியில் கலந்து கொள்ள இந்தியா செல்ல தயாராகவுள்ள இலங்கை அணிக்கு வாழ்த்து தெரிவிக்கும் நிகழ்வு கொழும்பில் இடம்பெற்றது.

இதில் கலந்து கொண்டு உரைாயற்றிய விளையாட்டுத் துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர –

வரலாற்றில் இலங்கை அணி சரிவை சந்தித்ததை நாம் அறிவோம் சிறந்த வீர்ர்கள் இதன் போது தோல்வி கண்ட போது அவர்களுக்கு கற்களும்,முற்களும் வீசப்பட்டன,அதேபோல் மலர் மாலைகள் அணிவித்த சந்தர்ப்பங்களும் உண்டு.

1994 ஆம் ஆண்டு திலங்க சமதிபால,எஸ்.பி.திசாநாயக்க போன்றவர்களின் உயர்ந்த பங்களிப்பின் பேரில் 1996 ஆண்டில் உலக கிண்ணத்தை சுவீகரிக்க முடிந்தது.

ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன ஆகிய நீங்கள் எமக்கு வழங்கிவரும் ஆதரவினால் மீண்டும் எமது நாடு தோல்வியின் பாதைக்கு செல்லாது என்பது கூறுவதுடன்,வெற்றி நடை போடும் ஒன்றாகவே இந்த போட்டியும் அமையும் என்ற உத்தரவாதத்தை தரவிரும்புகின்றேன்.

அனைத்து மக்களும் எமது நாட்டினது வெற்றிக்கு முழுமையான அதரவை வழங்க வேண்டும் என்று இந்த நேரத்தில் கேட்டுக் கொள்ள விரும்புகின்றேன்.

Post a Comment

0 Comments