இஞ்சி அஞ்சறைப்பெட்டியில் இருக்க வேண்டிய ஓர் அற்புமான அருமருந்தாகும்.
இன்றைய எண்ணமுடியாத ஆங்கில மருந்துகள் வெளிவருவதற்கு முன்பே இஞ்சியை சித்த மருத்துவத்தில் நம் முன்னோர்கள் மிக அதிகமாக பயன்படுத்தி உள்ளனர்.
காலையில் தேநீரில் சிறிதளவு இஞ்சிச்சாறும் மதியம் சாப்பாட்டில் மோருடன் ஒரு துண்டு சுக்கைப் பொடித்துச் சேர்த்தும் இரவில் ஒரு டீஸ்பூன் கடுக்காய்த் தூளைப் பாலில் கலந்தும் 48 நாட்கள் தவறாது சாப்பிட்டால் முதுமையை வெல்லலாம் என்கிறது சித்த மருத்துவம்.
இஞ்சி,நல்லமிளகு, சீரகம்... இந்த மூன்றையும் ஒன்றாக அரைத்து உட்கொண்டால் பித்தம், வாதம், பசியின்மை, அஜீரணக் கோளாறுகள், வாயுத்தொல்லை, புளித்த ஏப்பம், வயிற்றுப் பொருமல், வயிற்று வலி, குளிர் காய்ச்சல், காய்ச்சல் ஆகியவை நீங்கும்.
வாரத்திற்கு ஒரு நாள் இஞ்சிச்சாறு அருந்தினால் உடல் அசதி நீங்கும்.
இஞ்சியைத் தோல் நீக்கி வில்லையாக நறுக்கி பின்னர் நல்லெண்ணெயில் இட்டு காய்ச்சி நுரை வற்றியதுடன் இறக்கி ஆற வைத்துத் தலைக்குத் தேய்த்துக் குளித்தால் உடலுக்கு வலிமை தரும்.
விழா தினங்களில் இஞ்சியை ஒரு மங்கலப் பொருளாகப் பயன்படுத்துகின்றனர்.
இஞ்சியில் ஒரு கூட்டு வைத்து பந்தியில் பறிமாறினால் அது 108 கூட்டு வைத்துப் பரிமாறியதற்குச் சமம்.
திருமண வீடுகளிலும் ஏனைய சுப நிகழ்வுகளிலும் இஞ்சிக் கூட்டு ஒரு இன்றியமையாத இடத்தைக் தக்க வைத்துக் கொள்கிறது.
அமாவாசை நாட்களில் குறிப்பாக ஆடி, தை அமாவாசை மற்றும் ம-ஹாளய அமாவாசை ஆகிய நாட்களில் பந்தியில் இஞ்சி முக்கிய அங்கம் வகிக்கும்.
குழந்தைகளுக்கு வாரத்திற்கு ஒரு முறை இஞ்சிச்சாறு கொடுத்தால் அது ஒரு கிருமி நாசினியாகச் செயற்படும்.
குளிர்காலங்களில் இஞ்சி, நல்ல மிளகு, தனியா, கருப்பட்டி, தும்பை, துளசி, தூதுவளை ஆகியவற்றை ஒன்றாகப் போட்டு கொதிக்க வைத்து அதனுடன் கோப்பித்தூளையும் கலந்து இஞ்சி கோப்பியாகக் குடித்தால் உடல் அலுப்புக்கும் அசதிக்கும் ஓர் அரிய மருந்தாக அமையும்.


0 Comments