பிரபல பாடசாலைகளுக்கிடையில் நடைபெறும் மாபெரும் கிரிக்கட் போட்டியின்போது ஆயிரக்கணக்கான பாடசாலை மாணவர்கள் பியர் பாவனைக்கு ஆளாகுவதாக ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது என டாக்டர் அசங்க விஜேரத்ன தெரிவித்தார்.
மாணவர்கள் ஏனைய மதுபானம் உட்கொள்வதை பெற்றோர் அங்கீகரிக்காத போதும் பியர் பாவனையினை கண்டுகொள்வதில்லை. எனினும், பியர் பாவனையே ஏனைய மதுப்பழக்கங்களுக்கு அடித்தளம் என்பதை பெற்றோர்கள் உணர்ந்து மாணவர்களின் இந் நடவடிக்கை தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என டாக்டர் அசங்க விஜேரத்ன மேலும் தெரிவித்தார்.
இதேவேளை,பிரபல பாடசாலைகளுக்கிடையிலான மாபெரும் கிரிக்கெட் போட்டி மார்ச் மாதம் நடைபெறுகிறது.குறித்த காலப்பகுதியில் பாடசாலை மாணவக் குழுக்களுக்கிடையில் மோதல் இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது.
0 Comments