மனித உடலில் ஏற்படக்கூடிய பல நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிதல் மிகவும் கடினமாகும்.
இவ்வாறான நோய்களை நாளடைவில் கண்டறிந்த பின்னர் அவற்றிற்கான சிகிச்சைகளை வழங்குவதில் ஏற்படும் இடர்களை நீக்க புதிய தொழில்நுட்பம் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
கொரிய ஆராய்ச்சியாளர்களினால் உருவாக்கப்பட்ட Biosniffer எனும் அல்ட்ரா சென்சிட்டிவ் உடைய இக் கருவியானது வெளிச் சுவாசத்தினை பரிசீலித்து நோய்களை கண்டறியக்கூடியதாக காணப்படுகின்றது.
ஸ்மார்ட் மொபைல் சாதனங்களுடனும் இணைத்துப் பயன்படுத்தக்கூடிய இச் சாதனத்தின் ஊடாக நீரிழிவு நோய், சிறுநீரகக் கோளாறுகள், நுரையீரல் புற்றுநோய் போன்றவற்றினை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய முடியும்.
0 Comments