முந்தல் - மதுரங்குளி பகுதியில் புதையல் தோண்டிய ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
முந்தல் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே நேற்றைய தினம் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது பூஜைப் பொருட்கள் மற்றும் புதையல் தோண்ட பயன்படுத்தப்படும் உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக முந்தல் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, சந்தேகநபர்கள் மதுரங்குளி, கொழும்பு, கஹடகஸ்திகிலிய, தெமட்டகொடை மற்றும் திகாரிய ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்
சந்தேக நபர்கள் இன்று புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
0 Comments