குளியாப்பிட்டியவில் மூடப்பட்ட பாடசாலை நாளை இடம்பெறவிருக்கும் உயரதிகாரிகளுடனான பேச்சுவார்த்தையின் பின்னர் திறப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த பாடசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஒன்றில் முதலாம் வகுப்புக்கு அனுமதிக்கப்பட்ட ஆறு வயது சிறுவன் எச்.ஐ.வி. தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார் என பரவிய வதந்தியைடுத்து குறித்த பாடசாலை மூடப்பட்டது.
இந்நிலையில், எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் தொடர்பில் ஏற்பட்டுள்ள வீண் பயமும் வதந்தியுமே குளியாப்பிட்டிய சம்பவத்திற்கு பிரதான காரணம் என தேசிய பாலியல் தொற்று மற்றும் எய்ட்ஸ் தடுப்பு பிரிவின் விசேட நிபுணர் வைத்தியர் வீரசிங்க ஊடகம் ஒன்றுக்கு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த சிறுவனுக்கு எச்.ஐ.வி. தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், வீண் வதந்திகளை எவரும் நம்ப வேண்டாம் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
எவ்வாறாயினும், எச்.ஐ.வியினால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் இலங்கையில் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும், அவர்கள் முறையாக தமது கல்வி நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் நிலையில், அவர்களால் பிறருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, எச்.வி.ஐ. தொற்று வதந்தியால் பாடசாலைக்கு பிள்ளைகளை அனுப்புவதை தவிர்த்துள்ள மக்களுக்கு மேலதிக விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கையை எடுத்துள்ளத வைத்தியர் வீரசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.
0 Comments