எகிப்தின் எலெக்ஸாண்ட்ரியாவிலிருந்து கெய்ரோ நோக்கிப் பயணித்த விமானமொன்று கடத்தப்பட்டுள்ளது.
குறித்த விமானம் சைப்ரஸ் நாட்டில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
EgyptAir MS181 என்ற குறித்த விமானத்தில் ஆயுதங்கள் மற்றும் எரிபொருட்களுடன் நபரொருவர் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் அவர் தற்கொலை அங்கியொன்றையும் அணிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விமானத்தில் எத்தனை பயணிகள் உள்ளனர் என்ற விபரம் இதுவரை உறுதியாக தெரிவிக்கப்படவில்லை.
ஆரம்பத்தில் 81 பேர் இருப்பதாக தெரிவிக்கப்பட்ட போதிலும் , பின்னர் வந்த தகவல்கள் சுமார் 55 பயணிகள் விமானத்தில் இருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
'EgyptAir' விமானமொன்றே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளனர்.
சைப்பிரஸ் நாட்டின் லார்னகா விமான நிலையத்தின் விமான ஓடுதளத்தில் விமானம் தற்போது இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் பெண் மற்றும் குழந்தைகளை விடுவிக்க வேண்டுமானால் அதிகாரிகள் ஓடுதளத்தில் இருந்து செல்லவேண்டுமென , கடத்தல்காரர் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.




0 Comments