13.03.2016 இணைய ஊடகம் ஒன்றில் முஸ்லிம் காணிப் பிரச்சினைகளுக்கான செயலணி செயலிழப்பா??? என்ற தலைப்பில் வெளி வந்த செய்தியில் சில விடயங்கள் என்னை எனது பணிகளை களங்கப்படுத்தும் நோக்கோடு திட்டமிட்டு உண்மைக்குப் புறம்பாக எழுதப்பட்டுள்ளதால் இதற்கான எனது தனிப்பட்ட மறுப்பை விளக்கத்தைத் தர கடமைப்பட்டுள்ளேன். இதற்கும் யாழ் முஸ்லிம்களின் காணி தொடர்பான செயலணிக்கும் சம்மந்தம் எதுவும் இல்லை
1. செயற்குழுவின் முதலாவது கூட்டம் 06.03.2016 அன்று நடைபெற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இச் செயற்குழு கூட்டம் 05.03.2016லேயே நடந்தது.
2. யாழ் கிளிநொச்சி சம்மேளனத்துடன் யாழ் முஸ்லிம்களின் காணி தொடர்பான செயலணி இணைந்தே செயற்பட வேண்டும் என்ற தீர்மானம் எடுக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் இவ்வாறான எவ்வித தீர்மானமும் எச் சந்தர்ப்பத்திலும் செயலணிக் கூட்டத்தில் எடுக்கப்படவில்லை எந்தப் பேச்சும் இடம்பெறவில்லை. இச் செயலணிக்கும் சம்மேளனத்திற்கும் எவ்வித சம்மந்தமுமில்லை.
3. யாழ் முஸ்லிம்களின் காணிக்கான செயலணியின் அறிக்கைகளை சம்மேளனத்தின் தலைவர் ஜமால் மொஹிதீன் ஊடகங்களுக்கு வழங்குவார் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது என்று எழுதப்பட்டிருந்தது. ஆனால் இவ்வாறான எவ்வித முடிவுகளும் செயலணிக் கூட்டத்தில் எடுக்கப்படவில்லை. அன்றைய கூட்டத்தில் ஊடக அறிக்கை இவ்வாறு தான் இருக்க வேண்டும் என்று எழுதி உறுப்பினர்களிடத்தில் அங்கீகாரம் பெறப்பட்ட போது அதனை அப்படியே ஊடகங்களுக்கு வெளி வைப்பதற்கு யார் பொறுப்பெடுக்கின்றீர்கள் என வினவிய போது ஜமால் மொஹிதீன் தானே முன் வந்து பொறுப்பெடுத்தார். இது அன்றைய 05.03.2016 ஊடக அறிக்கைக்கு மாத்திரமே பொருந்தும்.
4. 05.03.2016ம் திகதிய கூட்டம் தொடர்பாக மௌலவி சுபியான் அவர்கள் மேற்படி விடயங்கள் தொடர்பில் ஊடகங்களுக்கு தனிப்பட்ட ரீதியில் செய்திகளை வெளியிட்டமையும் செயற்குழுவின் தீர்மானங்களுக்கு முரணாக செயற்பட்டமையினாலும் என்று குறிப்பிடப்பட்டுள்ளதையும் முற்றிலும் மறுக்கின்றேன். என்னால் எந்த ஒரு ஊடகங்களுக்கும் 05.032016 கூட்டம் தொடர்பான செய்திகள் வழங்கப்படவில்லை என்றும் செயற்குழுவின் எந்த தீர்மானத்திற்கும் முரணாக செயற்படவில்லை என்றும் இது என் மீது சுமத்தப்படும் வீண் குற்றச்சாட்டாகும் என்றும் குறிப்பிட விரும்புகின்றேன். இது என் மீதுள்ள காழ்புணர்ச்சிகளின் வெளிப்பாடு எனக் கருதுகின்றேன்.
5. யாழ் முஸ்லிம்களின் காணிகள் தொடர்பான செயலணியின் கூட்டம் இன்று சிறப்பாக (13.03.2016) நடைபெற்றது. கோரம் இருந்தது. விடயங்கள் ஆராயப்பட்டன. தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தை யாரும் பகிஷ;கரித்தாக நேரடியாகவோஇ எழுத்து மூலமாகவோ அறிவிக்கவில்லை. மூன்று உறுப்பினர்கள் தவிர்க்க முடியாத காரணத்தால் வரமுடியவில்லையென அறிவித்திருந்தனர். ஏனைய மூவர் எவ்வித அறிவித்தலும் தரவில்லை. ஏழு உறுப்பினர்கள் பங்குபற்றியிருந்தனர்.
6. இக் குழுவில் எவ்வித அரசியல் உள்நோக்கங்களும் இல்லை. இக்குழு யாழ் மாவட்ட முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்காக காணிகளை கண்டறிந்து அது தொடர்பான அறிக்கையை கௌரவ அமைச்சர் ரிஷhத் பதியுத்தீனுக்கு அறிக்கையிடுவதைத் தவிர வேறு எவ்வித பொறுப்பும் இக் குழுவிற்கு வழங்கப்படவில்லை.
7. மக்கள் பணிமனையினூடாக 2003ம் ஆண்டிலிருந்து பல்வேறு பணிகளைச் செய்து மீள் குடியேறி வரும் மக்களுக்கு பல்வேறு உதவி - நலன்புரித் திட்டங்களை மக்கள் பணிமனை செய்து வருகின்றது. அதனடிப்படையில் இதன் நடவடிக்கைகள் தொடர்பாக பொது மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டிய அறிக்கைகளை – செய்திகளைஇ அறிவித்தல்களை மக்கள் பணிமனை வெளியிடுகின்றது. இதன் வழமையான செயற்திட்டங்கள் தற்போதும் நடைமுறைப்படுத்தி வருகின்றது. இதற்கும் இந்த காணிக்கான செயலணிக் குழுவின் நடவடிக்கைக்கும் எவ்வித சம்மந்தமுமில்லை.
8. என். எம். அப்துல்லாஹ் என்பவர் இன்று (13.03.2016) கூட்டம் நடைபெறும் இடத்திற்கு வந்திருந்தார். இன்றைய கூட்டத்திற்கு யாழ் பறைச்சைவெளியில் காணி உள்ளவர்களை இக் கூட்டத்திற்கு வருகை தரும் படி கேட்டிருந்தோம். இவரும் அதற்காகவே வந்திருப்பதாகக் கருதினோம். ஆனால் இவர் அப்பட்டமான பொய்ச் செய்திகளை வெளியிட்டு சமூகத்தை குழப்பும் மகா பெரிய தவறைச் செய்துள்ளார். இவருக்கு பின்னால் ஏதேனும் கரங்கள் உண்டா? இவருக்கு இந்த செயலணியை குழப்புவதில் ஆதாயம் ஏதேனும் உண்டா? இவர் என்னிடம் கூட்டத்திற்குரிய ஆட்கள் வரவில்லையா? என்று கேட்டார். வேறொரு இடத்தில் இருக்கின்றனர். அவர்கள் வந்ததும் கூட்டம் இடம்பெறும் என்று குறிப்பிட்டேனே தவிர வேறு எவ்வித கருத்தையும்இ கதையையும் நான் அவருடன் கதைக்கவில்லை. ஆனால் என். எம். அப்துல்லாஹ் எனது தலைமையில் கூட்டம் இடம்பெறும் என்று அறிவித்தார் என எழுதியிருப்பது சுத்தமான பொய். இதனை வன்மையாகக் கண்டிக்கின்றேன்.
9. 05.03.2016 13.03.2016 இரண்டு திகதிகளும் இடம்பெற்ற கூட்டத்தின் அறிக்கைகள் இருக்கின்றன. விரும்பியவர்கள் பார்த்து உண்மையைத் தெரிந்து கொள்ளலாம்.
10. யார் இந்த என். எம். அப்துல்லாஹ்? இவர் ஓர் அரசியல்வாதியின் அலுவலராகக் கடமை புரிகின்றதாகக் கூறி வருகின்றார். யார் இந்த அரசியல் வாதி? வடமாகாண சபை உறுப்பினர் அஸ்மின் ஐயூப் ஆகும். இவருக்கு ஏற்கனவே கட்சி அமைப்பு சார்பற்ற இவ் யாழ் முஸ்லிம்களின் காணி விடயமான செயலணியில் இணைந்து கொள்ள அழைப்பு விடுவிக்கப்பட்டது. எனினும் அவர் இணைந்து கொள்ளவில்லை. இப்பொழுது இந்த செய்திகளுக்கெல்லாம் யார் சூத்திரதாரி என்பதை மக்கள் புரிந்து கொள்ளலாம்.


0 Comments