Subscribe Us

இறுதி ஓவரில் டோனி பாண்ட்யாவிடம் கூறியது என்ன?

ஐ.சி.சி. இருபது-20 உலகக் கிண்ணத் தொடரின் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பங்களாதேஷ் அணியை இந்திய அணி எதிர்கொண்டது. பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஒரு ஓட்ட வித்தியாசத்தில் இந்தியா வென்றது. 
பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்றதன் மூலம் அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பை தக்க வைத்துள்ளது. போட்டிக்கு பிறகு  விருது வழங்கும் நிகழ்ச்சியில்  இந்திய அணியின் அணித் தலைவர் டோனி இறுதி ஓவரை வீசிய பாண்ட்யாவிடம் என்ன தெரிவித்தேன் தொடர்பில் விளக்கமளிதார்.
'நாங்கள் சில விடயங்களை திட்டமிட்டது போல் செயல்படுத்தவில்லை. எனினும் பாண்ட்யாவிடம் N யார்க்கர் பந்தை வீச கூடாது என்று உறுதியாக கூறினோம். நேர்த்தியாக பந்தை விக்கெட்டுக்கு வெளியே வீச வேண்டும் என்று  பாண்ட்யாவிடம் நான் சொன்னேன்.
அதே நேரத்தில் அகலப்பந்து வீசாமல் இருக்குமாறும் கேட்டுக்கொண்டேன். எங்களது திட்டத்தை ஹர்த்திக் பாண்டியா சிறப்பாக செயல்படுத்தி இறுதி பந்தை வீசினார். பும்ரா பந்துவீச்சும் சிறப்பாக இருந்தது. அவரது 2ஆவது ஓவரில் ஓட்டங்களை கூடுதலாக கொடுத்து இருந்ததால் நெருக்கடி ஏற்பட்டது. 
இதேபோல பிடியெடுப்பையும் தவறவிட்டார்.  எனினும் இறுதியில் சிறப்பான ஒரு பந்து வீச்சை மேற்கொண்டிருந்தார்.

Post a Comment

0 Comments