(சாய்ந்தமருது
- எம்.எஸ்.எம்.
சாஹிர்)
சாய்ந்தமருது
ஜாமிஉல் இஸ்லாஹ் ஜும்ஆப் பள்ளிவாசல் நிர்வாகிகளால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த,
“உயிர் காக்க உதிரம் கொடுப்போம்”
எனும் தொனிப்பொருளில் அமைந்த, இரத்தான முகாம் கடந்த (27) ஞாயிற்றுக்கிழமை காலை
08.30 தொடக்கம் மாலை 05.00 மணிவரை கல்முனை அஷ்ரப்
ஞாபகார்த்த வைத்தியசாலையின் அனுசரணையில், பள்ளிவாசலில் நடை பெற்றதாக பள்ளிவாசலின் தலைவர் எஸ்.எம். இனாமுல்லாஹ் தெரிவித்தார்.
இதில் 138 பேர் ஆண்கள், பெண்கள் என இருபாலாரும் கலந்து கொண்டு இரத்ததானம் வழங்கினர்.
இவற்றுள்
102 பேருடைய இரத்தம் ஏற்றுக் கொள்ளப்பட்டு இரத்த வங்கிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
பொது மக்கள் இரத்ததானம் வழங்குவதையும் வருகை தந்தோரில் ஒரு பகுதியினரையும் மற்றும் ஏற்பாட்டுக் குழுவினரையும் படங்களில் காணலாம்.
0 Comments