Subscribe Us

header ads

விளையாட்டில் மட்டுமல்ல மார்க்கத்தை நிலை நாட்டுவதிலும் முன்னுதாரணமாகத் திகழும் வீரர்கள்



சர்வதேச அரங்கில் மிகவும் மதிக்கப்படும் இரு வீரர்கள் ...
ஹாஷிம் அம்லாவும் மொஈன் அலியும் அநேகரின் பார்வையை தம் பக்கம் ஈர்த்த சிறந்த வீரர்கள் .விளையாட்டாக இருப்பினும் தமது மார்க்கத்தை விட்டுக்கொடுக்காது அதன் கடமைகளை செவ்வனே செய்பவர்கள் எனில் மிகையாகாது .



ஹாஷிம் அம்லா தனது மனைவியை இஸ்லாம் கூறிய முறைப்படி முழுமையாக மறைத்தவாறு வெளியில் கூட்டிச் செல்லும் அந்த உன்னதமான காட்சி மக்கள் மத்தியில் பெரும் மதிப்பை அவருக்கு ஏற்படுத்தியுள்ளது .


ஒரு பெரும் பரிசளிப்பு விழாவில் அங்குள்ள பெண் அரைகுறையாக ஆடை அணிந்து வந்து எல்லோருக்கும் கைலாகு கொடுத்த போதும் தான் கொடுக்காமல் இருந்தது அவரது இஸ்லாமிய அறிவையும் பக்குவத்தையும் படம் பிடித்துக் காட்டுகின்றது .அவ்வாறே ஹாஷிம் அம்லாவை ஒரு பெண் அரைகுறை ஆடையோடு செவ்வி காண வந்த வேளையில் அப்பெண்ணுக்கு செவ்வி எடுப்பதற்கு அனுமதி கொடுக்காத பொழுது இது குறித்து ஊடகங்கள் வினவியதற்கு இவர் இஸ்லாமிய சட்டத்தையும் , ஒழுக்கத்தையும் தெளிவாக விளக்கியது முழு உலகிற்கும் தெரிந்த விடயம் . இன்று இஸ்லாமிய ஆளுமை நிறைந்த பெண் என்று கூறப்படும் ஆளுமை நிறைந்தவர்களிடம் கூட இல்லாத இஸ்லாமிய பண்புகள் இவரிடம் இருப்பதை வைத்தாவது அப்பெண்ணுக்கு வக்காளத்து வாங்குவோர் புரிந்து கொள்ளட்டும் .

அத்தோடு ஹாஷிம் அம்லா அதிகமாக மாற்று மதத்தவர்களுடன் பழகும் ஒருவராக இருந்தும் கூட கேலி , கிண்டல் , அவமரியாதை , அவமதிப்பு போன்றவற்றையும் பொருட்படுத்தாது மக்களின் பொருத்தம் முக்கியமல்ல இறைப் பொருத்தமே தமக்கு முக்கியம் என்பதை தமது தாடியின் மூலம் முழு உலக மக்களுக்கும் பாடம் கற்பித்தது மட்டுமன்றி நிரூபித்தும் காட்டிய ஒரு வீரர் . தாம் விளையாடும் அணியின் ஆடையில் மதுபான கம்பனி அனுசரனையாளர்களின் இலச்சினை பொறிக்கப்பட்டிருப்பதை உணர்ந்த ஹாஷிம் அம்லா தமக்கு இவ்வாறு இலச்சினை பொறிக்கப்படாத ஆடை இருந்தால் விளையாடுவதாகக் கூறி அவ்வாறான இலச்சினை இல்லாத ஆடையோடு விளையாட்டுகளுக்கு கலந்து அனைத்து வீரர்களுக்கும் முன்மாதிரியாகத் திகழ்கின்றார் . இவர் உரிய நேரத்தில் தொழும் வீரர் என்பதும் குறிப்பிடத்தக்கது .

மொஈன் அலீ , இவரும் ஹாஷிம் அம்லாவைப் போன்று இஸ்லாத்தை சர்வதேசத்தின் முன்னிலையில் அரங்கேற்றும் துணிவுள்ள வீரர் . அழகான அடர்த்தியான தாடியுடன் விளையாடுவது என்பது சாதாரண ஒரு விடயமல்ல . தாடியைக் கொச்சைப் படுத்தும் மேற்கத்தையவர்கள் வாழும் நாட்டில் தாடியே ஒரு ஆனுக்கு அழகு , இதுவே நபியின் வழிமுறை என்பதை செயற்பாட்டில் விளக்குகிறார்.இவரும் உரிய நேரத்தில் தொழுகையை நிறைவேற்றி இறைக்கட்டளைகளை அமுல்படுத்த துடிக்கும் ஓர் துடிப்பான இறைக் காதல் கொண்ட வீரர் எனில் மிகையாகாது .

எனவே வல்லவன் அல்லாஹ் இவர்களுக்கு மென்மேலும் ஈமானில் உறுதியைக் கொடுத்து நீண்ட ஆயுளோடு இஸ்லாத்தை நிலை நாட்டும் பாக்கியத்தையும் அருள்வானாக , இவர்களைப் போன்று ஏனைய வீரர்களையும் மாற்றியமைத்து மற்றவர்களுக்கும் இஸ்லாத்தைப் பற்றி நல்லெண்ணத்தை ஏற்படுத்துவானாக ! ஆமீன்
நட்புடன் அ(z)ஸ்ஹான் ஹனீபா
ஹுஸைனியா புரம் - பாலாவி

Post a Comment

0 Comments