தமக்கு வழங்கப்பட்டிருந்த குண்டு துளைக்காத வாகனம் பழுதடைந்துள்ளதாகவும், அதனை பழுதுபார்க்க இன்னும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாகனத்தை பழுதுபார்த்து கொடுக்குமாறு பணிப்புரை விடுத்துள்ள நிலையில், ஜனாதிபதியின் செயலாளரும் ஏனைய அதிகாரிகளும் வாகனத்தை பழுதுபார்க்க ஆர்வம் காட்டவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை தனக்கு வழங்கப்பட்டுள்ள உத்தியோகபூர்வ இல்லமும் இதுவரை புனரமைக்கப்படவில்லை எனவும் அவர் இன்றைய சிங்கள பத்திரிக்கை ஒன்றுக்கு வழங்கியுள்ள நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
0 Comments