Subscribe Us

header ads

எமது சிறு வயதில் நாம் விளையாடிய விளையாட்டுக்களும் பொழுது போக்குகளின் பெயர்களும்


1. கிட்டியும் பொல்லும் 
2. எல்லை (ரவ்ண்ட் ரேஸ்)
3. பம்போல் 
4. ஜில் போலை 
5. மொக்குட்டு 
6. கிண்ணி 

7. சில் போணி 
8. சிந்தாமணி ஞாயிரு பத்திரிகை. கதை வாசித்தல்  
9. தபால் வருது கியா கியா 

10. சக்குடு மாங்கா மடீல கட்டி சாம்பக்கோழி கூ கூ 
11. சூ 
12. நொண்டி கோடு
13. கப்பல் கோடு 
14. பூட் போல் 
15. கிரிகட் (மாங்கொட்டை போலாகவும் காமட்டை பெட்டாகவும் )
16. டையர் உருட்டுதல்
17. ரிம் உருட்டுதல் 
18. நொங்கு கரத்தை 
19. பல்லாங்குழி 

20. மனோபோலி 
21. கட்டைபோல் குருவி அடித்தல் 
22. கிண்ணியில் நூல் கட்டி சுத்துதல் 
23. பட்டம் விடுதல் (பாம்புவால் பட்டம், பொட்டி பட்டம் ) குச்சி வெட்டி, நூல் கட்டி, பேபர் வெட்டி, பசையால் ஒட்டி, குஞ்சான் கட்டி, வாழ் கட்டி, சீல் கட்டி, அடடா.
24. தூண்டியில் புழு கொருத்து மீன் பிடித்தல் 
25. கனா முனா தேங்கா
26. மண்ணிற்குள் குச்சி ஒழித்து தேடுதல் 
27. கள்ளன் போலீஸ் 
28. கிளித்தட்டு (காயும் பழமும் சப்பை )
29. கடலிலும் குளத்திலும் சப்பை கல் வீசி கூடுதலாக எவ்விச்செல்வதை நோக்கல் 
30. ரேஸ் ஓடுதல்
31. காக்கை முட்டை எடுத்து மதலில் அடித்தல் 
32. காமட்டையில் ஒருவர் இருக்க மற்றவர் இழுத்தல் 
33. பெட்மிண்டன் 
34. கால்கட்டி ரேஸ் 
35. டயரிட்குல் ஒருவர் இருக்க மற்றவர் உருட்டுதல் 
36. சரத்தில் காற்றடித்து குளத்தில் நீந்துதல் 
37. குழி ஓடி மிகத்தூரம் யார் செல்லல் என பார்த்தல் 
38. அதிக நேரம் நீரிட்குள் யார் இருப்பது என்ற போட்டி 
39. கொப்பிதாளில் இலக்கம் இட்டு கூறும் இலக்கத்திற்கு எதிலும் டச் பண்ணாமல் கிறுக்குதல் 
40. ஹோம் அட்டை 
41. டாம் அட்டை (சிக்னல் மூடி - ஒரு பக்கம் நீலநிற மூடி மற்றைய பக்கம் சிகப்பு நிற மூடி )
42. பாம்பு அட்டை 
43. கெரம் விளையாட்டு 
44. கார்ட்ஸ் விளையாட்டு (சோடி பார்த்தல், ....)
45. மரத்தில் ஏரி நீரில் பாய்தல் 
46. குளத்தில் ஒரே மூச்சில் அக்கறைக்கு சென்று இக்கரைக்கு மீண்டும் வருதல் 

47. முயல் வளர்த்தல் 
48. கிளி வளர்த்தல் 
49. கலர் மீன் வளர்த்தல் 
50. பாதையில் செல்லும் போது கல்லால் ஜான் போடுதல் 
51. கைரில் இருபக்க நொனியில் கல் கட்டி கரண்ட் கம்பிக்கு வீசுதல் 
52. கானிட்குல் இறங்கி காலால் இறைத்து மீன் பிடித்தல் 
53. சிரட்டையில் சவர்க்காரம் கரைத்து பப்புள் குழலால் பபுள் விடுதல் 54. ஊஞ்சல் ஆடுதல் 
55. கதிரை பிடித்து விளையாடுதல் 
56. கடை வைத்து விளையாடுதல் (செங்கள் தூள் கொச்சிக்கா தூளாக விற்பனை )
57. தென்னை ஓலையில். ஊதி, மோதிரம், கடிகாரம் செய்தல் 
58. வீடு கட்டி விளையாடுதல் (பழைய ஓலை காம்மட்டை சனநூல் போன்றவை பயன்படுத்தல் )
59. சிறிய குரும்பையில் குச்சி சொறுகி கிடி கிடி சுத்துதல் 
60. பனை ஓலையில் பேfன் செய்து ஓடித்திரிதல்
61. கண் கட்டி விளையாடுதல் 
62. முட்டி உடைத்தல் 
63. பூ பறிக்க வருகிறோம் என்னா பூ வேண்டுமோ
64. ஐஸ் கொயிஷ் 
65. ரன் ரன் ஸ்டொப்
66. குளம் கரை 
67. பாட்டுக்கு பாட்டு 
68. கூட்டாஞ்சோறு 
69. கிளாச்சி புடிச்சி விளையாடல் 

70. கைரு பாய்தல் 
71. கை விரல்களை நீட்டி "ஓ அருக்கு முறுக்கு தாம தீம தை" 
72. சங்கிலி பிங்கிலி கதவை திற நான் மாட்டேன் வேங்கை புலி 
73. தூ துக்ருஸ், அப்பா டவ்னா, மூத்தி பீத்தி மூணு நாலு 
74. சுடு தண்ணியா பச்சை தண்ணியா 
75. ஓ த ரோபின் பாசிங் பை தீந்த கொப்பியை டார்லிங் பை டட் டட் டட் டட் டட் 
76. இடம் பொருள் படம் 
77. தும்பி அடித்து விளையாடல் 
78. ஓணான் கன்னி வைத்து பிடித்தல் 
79. மூளை பிடித்து விளையாடல் 
80. மூக்கில் 50 தடவை சுரண்டி விளையாடல் (பின்னர் மூக்கில் புன்னு ஏற்படல் )
81. ஒரு விரலில் எச்சி தொட்டு விரலை மாற்றி காட்டுதல் 
82. மாங்கொட்டையை பள்ளிவரை காலால் அடித்து செல்லுதல் 

83. உடைந்த சட்டிபானை துண்டை உதட்டில் தொங்கவிட்டு காட்டுதல் 
84. 7 குச்சிகளை உள்ளங்கையால் ஊண்டி கீழே விழ விட்டு அசையாமல் ஒவ்வொன்றாக எடுத்தல் 
85. வில்வெட்டு பூச்சி வளர்த்தல் 
86. மைல் இறகை கொப்பிக்குள் வைத்து குட்டி இடும் என காத்திருத்தல்
87. ஆலாட கூட்டுக்குள் பச்சை பாம்பு என கத்திக்கொண்டு அது பறக்கும் பக்கமெல்லாம் ஓடுதல் 
88. துரத்தி விளையாடுதல் - ஓ பத்து இருபது முப்பது 
89. ஓ வாழக்கா தோலக்கா அஸ் பஸ் குஸ் 
90. புளியன்கொட்டையை குலுக்கி கீழே போட்டு விரலால் கோடு கீறி ஒன்றோடு ஒன்று சுண்டுதல் 
91. சொப்பிங் பேகை வாயில் உறிஞ்சு முட்டை செய்து அடுத்தவன் நெத்தியில் அடித்தல் 
92. முழங்கையை மடித்து வைத்து முடிகள் சிக்கும் வரை கசக்கி கையை விரிக்கும் படி கூறல் 
93. சைக்கிள் ஸ்போக் கம்பியை வளைத்து தீக்குச்சி தலையை ஒருபக்கம் நுழைத்து ஆணியை சொருகி ஓங்கி அடித்தல் (அடி வெடி சத்தம் போன்று கேட்கும் )
94. கெப் தோக்கு 
95. தாளில் லக்ஸ்பிரே மா வாங்கி சாப்பிட சல்லி தேடி திரிதல்  
96. சோலகத்தை ஐந்தாக வெட்டி ஒரு துண்டு வாங்க சல்லி தேடி திரிதல் 
97. தாழிச்ச கிழங்கும், அவிச்ச பிலாக்கொட்டையும், பினாட்டும், சோளகப்பொறியும், நிலக்கடலையும் வாங்க சல்லி தேடி திரிதல் 
98. அட்டையில் மூக்குக் கண்ணாடி செய்து STAR TOFFEE தாளில் (சிகப்பு, மஞ்சள், நீளம் ) ஒட்டி கண்ணாடி போடல் 
99. மௌளத்து சோறு வாங்க வாலியுடன் ரப்பர் பிடவை சோடினைகளுக்கு (சல சல என்ற சத்தம்) மத்தியில் பாதை எங்கும் ஓடி திரிதல். (ஸ்பீக்கர் கட்டி இஸ்லாமிய கீதம் ஒலித்துக்கொண்டிருக்கும் )
100. பாடசாலையும், ஓதும் பள்ளியையும் தவிர வேறு எந்த நேரமும் இன்பமான விளையாட்டுக்கள்.

Post a Comment

0 Comments