மார்ச் 14 (திங்கள்) ஜெனீவாவில் ஆரம்பிக்கப்பட்ட பேச்சுவார்த்தைகளை அடுத்து ரஷ்யா தனது பிரதான இராணுவப் பிரிவினை வெளியேற்ற இணக்கம் தெரிவித்துள்ளது. சுவீஸின் ஜெனீவா நகரில் சிரியாவின் அரசாங்கத்திற்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையில் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகளை அடுத்தே ரஷ்யா இவ்வாறு இணக்கம் தெரிவித்துள்ளது.
புட்டின் இது குறித்து ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் சேஜி சொய்கூவிடம் கருத்து வெளியிடுகையில், பாதுகாப்பு அமைச்சிடம் வழங்கப்பட்ட பொறுப்பு நிறைவேற்றப்பட்டு விட்டது. எனவே, சிரிய அறப் குடியரசிலிருந்து பிரதான படைப் பிரிவை திருப்பி அழைக்குமாறு கட்டளையிடுகின்றேன் எனத் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், சிரியாவின் டாகூஸ் மற்றும் குமைமிம் ஆகியவற்றிலுள்ள இரு இராணுவ முகாம்களும் நீடித்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டாகூஸ் ஒரு கடற்படை முகாம் ஆகும். அதேவேளை, குமைமிம் ரஷ்யாவின் பிரதான விமானத் தளமாகும். சிரியாவின் நிலம், கடல் என்பவற்றுக்கு பாதுகாப் பளிக்கவே இந்த ஏற்பாடு என ரஷ்யா தெரிவித்துள்ளது.
சிரியாவிலிருந்து ரஷ்ய போர்ப் படை வெளியேறு வதானது அந்நாட்டின் உள்ளக மோதலுக்கு அரசியல் தீர்வொன்றைக் காண்பதற்கான உந்துகோலாக இருக் கும் எனவும், மோதலில் ஈடுபட்டுள்ள தரப்பினருக்கு இது ஒரு சிறந்த தீர்மானமாக இருக்கும் எனவும் புட்டின் தெரிவித்துள்ளார். குறிப்பாக, மோதலில் ஈடு பட்டுள்ள அனைத்துத் தரப்பினர் மத்தியிலும் நம்பிக் கையைக் கட்டியெழுப்புவதற்கு ரஷ்யாவின் இந்த நகர்வு ஊக்கமளிக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சிரியாவில் ரஷ்யாவின் இராணுவத் தலையீடு அந் நாட்டின் சிவில் யுத்தத்தில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியது. சர்வதிகாரத்திலிருந்து நாட்டை மீட்டெடுக்கின்ற புரட்சியில் குதித்த எதிர்க்கட்சியினரை அடக்குவதிலும் கொன்றொழிப்பதிலும் ரஷ்ய போர்ப்படை பெரும் பங்கு வகித்துள்ளது.
முன்னைநாள் ஆப்கான் போன்று சிரியாவிலும் ரஷ்யா ஏற்படுத்திய மனித அவலம் பாரியதாகும். பாகு பாடின்றி பொதுமக்கள் மீது ரஷ்யத் துருப்பினர் மேற்கொண்ட தாக்குதல்களில் நூற்றுக்கணக்கான குழந்தைகள், பெண்கள் உயிழந்துள்ளனர்.
அதேவேளை, சட்டபூர்வமான புரட்சியாளர்களையும் ரஷ்ய இராணுவம் பெருமளவில் கொன்றுள்ளது. ரஷ்ய பாதுகாப்பு அமைச்சின் தகவல்களின்படி 17 தலைவர்கள் உள்ளிட்டு 2000 புரட்சிப் படையினரை இதுவரை ரஷ்ய இராணுவம் அழித்துள்ளது. ஆனால், சட்டபூர்வ பரட்சிப் படையினர் எண்ணிக்கை இதைவிட அதிகம் என அங்கு இயங்கி வரும் இஸ்லாமிய போராளிக் குழுக்கள் ரஷ் யாவை குற்றம் சுமத்தியுள்ளன.
பஷ்ஷார் அல் அஸத், தனது தந்தையின் வழியில் கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக நடத்தி வரும் சர்வதிகார இராணுவ ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கி லேயே அங்கு புரட்சி வெடித்தது. ஆயினும், அம்மக்கள் புரட்சியை ரஷ்ய இராணுவத் தலையீடு கடுமையாக ஒடுக்கி விட்டது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதேவேளை, ரஷ்யாவில் நீடித்திருக்கும் இராணுவம் போர் நிறுத்த உடன் பாட்டைக் கண்காணிக்கும் எனவும் ரஷ்ய ஜனாதிபதி புட்டின் தெரிவித்துள்ளார். ரஷ்யா சிரியாவிலிருந்து முற்றாக வெளியேறுவதற்குக் காட்டும் தயக்கம் சந்தேகத் திற்குரியது என அந்நாட்டின் அரசியல் ஆய்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அஸதைக் கைவிடுவதற்கு ரஷ்யா ஒருபோதும் தயாரில்லை என்பதையே அதனது நகர்வு காட்டுகின்றது. பேச்சுவார்த்தை ஆரோக்கியமானது என சிரியாவின் அரசாங்கம் தெரிவித்துள்ளபோதும், எதிர்க்கட்சிகள் தமது பூரண திருப்தியை இதுவரை வெளியிட வில்லை.(MP)


0 Comments