ஆனந்த் அம்பானி பெயர் பலருக்குத் தெரியாமல் இருந்திருக்கலாம். ஆனால் இவரது முகமும், உருவமும் பலரது மனதில் பதிந்து போன ஒன்று.
ஆம், ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி - நீதா அம்பானியின் பருமனான உடல்வாகு கொண்ட மூத்த மகன் தான் இவர்.
ஐபிஎல் போட்டிகளில் இவர் உட்கார்ந்திருப்பதை வைத்து சமூக வலைத்தளங்களில் பலர் கேலி செய்து வந்தனர்.
ஆனால் இன்று பலரும் வியக்கும் வண்ணம் தனது உடல் எடையில் 70 கிலோவைக் குறைத்து அழகாக தோற்றமளிக்கின்றார்.
ஆனந்த் அம்பானியா இவர்? என்று ஆச்சரியப்படும் வகையில் தோற்றத்தில் மாற்றமடைந்துள்ளார்.
அவரது உடல் மெலிந்த புதிய புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகின்றது.
தைரோய்டு பிரச்சினை உடையவர் ஆனந்த் அம்பானி. இதனால்தான் அவரது உடல் எடை மிக மிக அதிகமாக இருந்தது. இந்த நிலையில் கடுமையான உடற் பயிற்சி செய்து உடல் எடையை குறைததுள்ளாராம்.
கிட்டத்தட்ட 70 கிலோ வரை குறைத்துள்ளதாக சொல்கிறார்கள். அமெரிக்காவைச் சேர்ந்த நிபுணர் ஒருவரின்நேரடி கண்காணிப்பில் தனது உடல் எடையைக் குறைக்கும் வேலையில் தீவிரமாக இறங்கினாராம் ஆனந்த்.
இதன் விளைவாக இன்று உடல் மெலிந்து காணப்படுகின்றார்.



0 Comments