முஸ்லிம்
காங்கிரஸின் மாநாட்டைப் பகிஷ்கரித்த கட்சியின் செயாலாளர் நாயகம் ஹஸனலிக்கு முஸ்லிம் காங்கிரஸ் அதிருப்தியாளர்கள் தமது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் வெளியிட்டுள்ளனர்.பலர் அவருடன் நேரடியாக தொடர்பு கொண்டு தமது பாராட்டுக்களை தெரிவித்தனர்.
முஸ்லிம்
காங்கிரஸிற்குள்
இருக்கும் ஒரு முதுகெழும்பு உள்ள தலைவராக நீங்கள் இருக்கின்றீர்கள் என்று மு கா அதிருப்தியாளர் ஒருவர் அவரிடம் தெரிவித்ததாக கூறப்படுகின்றது.
கோடிக்கணக்கான ரூபாய்களை
செலவழித்து நாட்டில் நாலா பகுதிகளிலுமுள்ள சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களை கூலிக்கு அமர்த்தி மாநாட்டுப் பிரதேசத்தை மு கா தலைமை நிரப்பியுள்ள போதும் ஜனாதிபதியும் பிரதமரும் அந்த மாநாட்டு மேடையை அலங்கரித்த போதும் அக்கட்சியின் செயலாளர் நாயகம் கலந்து கொள்ளாமை ஹக்கீமுக்குக் கிடைத்த பலத்த அடியென்று தெரிவிக்கப் படுகின்றது.


0 Comments