இலங்கையின் சுதந்திரம் என்பது வெறுமனே சிங்களவர் மட்டுமோ அல்லது தமிழர் தனித்தோ அல்லது முஸ்லிம்களின் தனி முயற்சியின் மூலமோ பெறப்பட்ட ஒன்றல்ல. மாறாக இலங்கை வாழ் சமூகங்களான சிங்களவர், தமிழர், முஸ்லீம்கள் அனைவரும் இன, மத, மொழி வேறுபாடின்றி ஆங்கிலேயருக்கெதிராக மேற்கொண்ட போராட்டத்தின் விளைவாகும்.
1948ஆம் ஆண்டு வரை ஒருமித்து குரல் கொடுத்த சமூகங்கள் ஆங்கிலேயர் நாட்டை விட்டு வெளியேரி ஒரு தசாப்தம் முடிவடைவதற்குள் பாரிய பிளவினை எதிர்நோக்கியமைக்குச்சான்றாக தனியே சிங்களவர்களின் நலனினை மாத்திரம் இலக்காக கொண்டு உருவாக்கப்பட்ட 1956 ஆம் ஆண்டு தனிச்சிங்களமமொழிச்சட்டத்தை குறிப்பிடமுடியும்.
இதனை உணர்ந்த மூத்த தமிழ்தலைவர் செல்வநாயகம் உள்ளிட்ட குழு தமிழர்களின் உரிமைப்போராட்டத்தை அகிம்சை வடிவில் ஆரம்பிக்க பயனற்றுப்போன அகிம்சைப்போராட்டங்கள் தமிழ் இளைஞசர் சமூகத்தை ஆயுதப்போராட்டத்திற்கு இறையாக்கி விடுதலை புலிகள் இயக்கத்தலைவரை ஏக மைந்தனாக்கியது.
தமிழர்களின் ஆயுதப்போராட்டத்தை சரி கண்ட சில முஸ்லிம் இளைஞர்கள் புலிகளோடு இணைந்து ஆயுதம் ஏந்தினர் (SLMC தவிசாளர் பசீர் சேஙகுதாவுத் ஓர் முன்னைய போராளி)) இவ்வாறான பின்னனியில் ஆயுத கலாச்சாரம் என்பது முஸ்லிம்களுக்கு உகந்த ஒன்றல்ல என தந்தை செல்வநாயகத்தின் பாசறையில் வளர்ந்த அஷ்ரப் எனும் இளம் போராளி சிந்தித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்ரஸ் எனும் மக்கள் இயக்கத்தை உருவாக்கி ஆயுத மோகம் கொண்டிருந்த முஸ்லிம் இளஞ்சர்களை ஆயுதம் துறக்கச் செய்து அரசியல்ரீதியான உரிமைப்போராட்டத்தின் போராளிகளாக ஒவ்வொரு இளைஞனும் மாற வழி ஏற்படுத்தினார்.
இவ்வாறு விழிப்புப்பெற்ற இளைஞர் சமூகம் முஸ்லிம்களின் ஏக சொத்தாகிய முஸ்லிம் காங்ரசின் ஒவ்வொரு தேர்தல் வெற்றிக்கும் பங்காற்றி இறுதியாக பாராளுமன்ற ஆளுங்கட்சி ஆசனத்தினை தீர்மானிக்கின்ற கட்சியாக முஸ்லிம் காங்ரஸ் உருவாகும்வரை உழைத்தது. காலம்மாறியது முஸ்லீம் இளைஞர் சமூகத்தின் உதாரண புருஷனை இறைவன் தம்பக்கம் அழைத்துக்கொண்டான்.
தலைவனின் மறைவுடன் பதவி மோகம் பிடித்த பலர் கட்சியை விட்டு வெளியேரி கட்சிக்கெதிராக சதி செய்ய ஆரம்பித்தனர்.
சதிகளில் இருந்து கட்சியை மீற்க சானக்கிய தலைவன் ஹக்கீம் ஒருபக்கம் முயன்று கொண்டிருக்க மறுபக்கம் இளைஞ்சர் சமூகம் பதவி, பண ஆசை காட்டப்பட்டு பெரும்பான்மை சக்திகளின் முகவர்களான ஒரு சில முஸ்லிம் அரசியல்வாதிகளின் சதிவலைக்குள் சிக்கித்தவித்தனர் என்றாலும் இன்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்ரஸ் ஆளும் நல்லாட்சி அரசாங்கத்தில் முக்கிய சில உரிமை ரீதியான முன்மொழிவுகளோடு களம் இறங்கி முழு இலங்கைத்தேசத்திற்கும் சனாதிபதி, பிரதமர் முன்னிலையில் இன்ஷா அல்லாஹ் 19ம் திகதி பாலமுனை தேசிய மாநாட்டினை களமாக பயன்படுத்தி இலங்கை வாழ் முஸ்லிம் சமூகத்தின் உரிமைக்கோசத்தை முன்வைக்க இறுக்கின்ற இத்தேசிய மாநாடானது முஸ்லிம் இளைஞர்கள் உரிமைரீதியாக தம்மை புடம்போட்டுக்கொள்ள கிடைத்திருக்கின்ற அரிய பெறுமதி மிகுசந்தர்ப்பமாகும்
-SIFAS NAZAR- (BA,Reading LLB)


0 Comments