Subscribe Us

header ads

7வது தடவையாகவும் தேங்காய் உடைக்கும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர்!


தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகளைக் கண்டித்து ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் இன்று 7வது தடவையாகவும் தேங்காய் உடைக்கவுள்ளனர்.

சிலாபம்- முன்னேஸ்வரம் ஸ்ரீபத்திரகாளி கோவிலிலே இந்த தேங்காய் உடைக்கும் நிகழ்வு இடம்பெறவுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

இதற்கு முதலிலும் இந்த ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் நாட்டின் பல்வேறு பிரதேச ஆலயங்களிலும் தேங்காய் உடைக்கும் நிகழ்வுகளை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஹிக்கடுவை-சீனிகம தேவாலயம்,இரத்தினபுரி, சிறிய கதிர்காமம், சிங்கக்குலிய, மொரட்டுவ, முகத்துவாரம் காளிக்கோவில், குளியாப்பிட்டிய ஆகிய இடங்களிலுள்ள ஆலயங்களில் தேங்காய் உடைத்து அரசாங்கத்திற்கு எதிர்ப்பினை வெளிக்காட்டியிருந்தனர்.

இதேவேளை, இன்று அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவித்து மற்றுமொரு குழுவினர் பூஜை வழிபாட்டில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த இந்த நிகழ்வும் சிலாபம்-முன்னேஸ்வரம் ஸ்ரீ பத்திரகாளி அம்மன் கோவிலிலே இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த பூஜை வழிபாட்டினை இலங்கை போக்குவரத்து சபையின் வடமாகாண சபையின்ஊழியர்கள் அமைப்பு ஏற்பாடு செய்துள்ளதோடு, இதற்கு விமான சேவைகள் மற்றும்  போக்குவரத்து பிரதி அமைச்சர் அசோக் அபேசிங்கவும் கலந்துக் கொள்ளவுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

Post a Comment

0 Comments