தேசிய நுகர்வோர் பாதுகாப்பு வாரத்தின் பிரதான நிகழ்வுகள் எதிர்வரும் 15 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வவுனியா காமினி மஹா வித்தியாலய மைதானத்தில் இடம் பெறவுள்ளதாக கைத்தொழில்,வணிகத்துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவவித்துள்ளார்.
இது தொடர்பிலான கலந்துரையாடல் வவுனியா அரசாங்க அதிபர் பணிமனையில் கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் தலைமையில் சனிக்கிழமை(2016-03-12) இடம் பெற்றது.
வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரேஷ் குமார் உள்ளிட்ட பிரதேச செயலாளர்கள் மற்றும் திணைக்களங்களின் பிரதி நிதிகள் என பலரும் இதில் கலந்து கொண்டனர்.
மேலும் அமைச்சர் றிசாத் பதியுதீன் இங்கு தகவல் தருகையில் –
தேசிய நுகர்வோர் பாதுகாப்பு வாரமாக 14 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.இந் த தினங்களக்குள் எனது அமைச்சின் கீழ் உள்ள சதொச நிறுவனம் உள்ளிட்ட 60 நிறுவனங்களின் பொருட்கள் ஒரே விலையில் விற்கப்பட உள்ளது.இதன் மூலம் பாவணையாளர்கள் நன்மைகளை பெறுவதுடன்,நியாயமான விலையில் பொருட்களை கொள்வனவு செய்ய முடியும்.இந்த உற்பத்தி பொருட்களை வழங்கும் நிறுவனங்கள் அவர்களது தயாரிப்புக்களை 6000 வர்த்தக நிலையங்களின் ஊடகாவும் இந்த வாரத்தினை நினைவு கூறும் வகையில் பொருட்களை உற்பத்தி செய்யவுள்ளனர்.
எனது அமைச்சின் கீழ் இயங்கும் நுகர்வோர் அதிகார சபை தேசிய நிகழ்வினையிட்டு வவுனியா மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 30 பாடசாலைகளில் 3 தினங்களுக்கு தெளிவூட்டும் செயலமர்வினை நடத்தவுள்ளனர்.
அதற்கு இணைவாக 15 ஆம் திகதி மேற்குறிப்பிட்ட நிறுவனங்களின் காட்சிக் கூடங்கள் நுகர்வோரின் நலனை கவனத்திற் கொண்டு காமினி மஹா வித்தியாலயத்தில் எற்படுத்தப்படவுள்ளன.
பொதுமக்கள் மற்றும் பாவணையாளர்கள்,சிறு தொழில் முயற்சியாளர்கள் இந்த தினத்தினை பயன்படுத்திக் கொள்ள முடியும் என அமைச்சர் றிசாத் பதியுதீன் இதன் போது கூறினார்.
0 Comments