Subscribe Us

header ads

100 இக்கு 15 வீதமானவர்களுக்கு நீரிழிவு நோயும், 20 வீதமானவர்களுக்கு இரத்த அழுத்தமும் காணப்படுவதாக சுகாதார அமைச்சின் ஆய்வின் தகவல் தெரிவிக்கின்றது

அபு அலா –

இலங்கையில் வாழும் மக்களிடத்தில் 100 இக்கு 15 வீதமானவர்களுக்கு நீரிழிவு நோயும், 20 வீதமானவர்களுக்கு இரத்த அழுத்தமும் காணப்படுவதாக சுகாதார அமைச்சின் ஆய்வின் தகவல் தெரிவிக்கின்றது என கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் நேற்று (06) கூறினார்.

அட்டாளைச்சேனை ஐடியல் பியுபிள்ஸ் லீக் (IPL) ”சமூகத்திற்கான ஒன்றியம்” உயர்பீடக் கூட்டம் கடந்த (05) அதன் தலைவர் எஸ்.எச்.சபீக் தலைமையில் இடம்பெற்றபோது மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் கூறுகையில்,

எமது மக்கள் இரசாயன உர வகைகளை மிக அதிகமாகப் பயன்படுத்தி விவசாயங்களைச் செய்து அதன் மூலம் பெறப்படும் உணவுகளையே அதிகம் உண்டு வருகின்றனர். எம்மக்கள் நாவுக்கு ருசியான உணவுகளை அதிகம் விரும்பி உண்டு வருவதனால் எமக்கு ஏற்படவுள்ள அபாயங்களை மறந்த நிலையிலும் வாழ்ந்து வருகின்றனர்.

இதனால் எமது வாழ்க்கை முறைமை ஒரு பிழையான சுற்றோட்டத்தின் கீழ் செல்கின்றது. இந்நிலைமை எமது சமூகத்தில் மாற்றப்படவேண்டும். அதற்கான ஒரு திட்டத்தினை இளம் சமூதாயத்தினராகிய நீங்கள் பாடுபட்டு முயற்சிப்பதன் மூலமே இதனை மாற்றியமைக்க முடியும் என்றார்.

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீரின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியின் மூலம் ஒதுக்கப்பட்ட 4 இலட்சத்துக்கு 200 பிலாஸ்டிக் கதிரைகளும், முழுமையான ஒலிபெருக்கி சாதனங்களையும் அட்டாளைச்சேனை ஐடியல் பியுபிள்ஸ் லீக் (IPL) ”சமூகத்திற்கான ஒன்றியத்துக்கு அமைச்சரினால் கையளித்து வைக்கப்பட்டது.




Post a Comment

0 Comments